அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாரம் 50 லட்சம் தடுப்பூசி கொடுங்க பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Updated : செப் 22, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (8+ 6)
Share
Advertisement
சென்னை ;'தமிழகத்திற்கு வாரம்தோறும், 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசு ஆதரவு அளித்து வருவதற்கும், கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கியதற்கும் நன்றி.எனினும், கொரோனா
வாரம் 50 லட்சம் தடுப்பூசி , பிரதமர், முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை ;'தமிழகத்திற்கு வாரம்தோறும், 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசு ஆதரவு அளித்து வருவதற்கும், கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கியதற்கும் நன்றி.எனினும், கொரோனா தடுப்பூசி தொடர்பான அளவீடுகளில், தேசிய சராசரியை விட, தமிழகம் பின்தங்கியே உள்ளது. இதற்கு, முதல் நான்கு மாதங்களில் போதிய தடுப்பூசி வினியோகம் செய்யாததே காரணம்.

தற்போது, அரசின் சிறப்பான நடவடிக்கைகளால், தமிழகத்திற்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகள், இரண்டு, மூன்று நாட்களில் மக்களுக்கு போடப்பட்டு விடுகின்றன. எனவே, தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவை.தினசரி தடுப்பூசி போடுவதுடன், இரண்டு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இம்மாதம், 12ம் தேதி நடந்த முகாமில், 28.91 லட்சம் பேருக்கும்; 19ம் தேதி நடந்த முகாமில், 16.43 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நடப்பு மாதத்தில் 19 நாட்களில் மட்டும் 4 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்த, போதிய நடவடிக்கை எடுத்தாலும், தேசிய சராசரியில் இருந்து தமிழகம் பின் தங்கி உள்ளது.தடுப்பூசி சப்ளை, மற்ற மாநிலங்களை விட, தமிழகத்திற்கு குறைவாக வழங்கப்படுவது தொடர்கிறது. இதை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் தேசிய சராசரியை, தமிழகம் தாண்ட முடியும். மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட, தினசரி மையங்களுடன், தொடர் இடைவெளியில் மெகா முகாம்களையும் நடத்த வேண்டி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஒரு வாரத்தில் 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை எளிதாக பயன்படுத்த முடியும். இது தொடர்பான விபரங்களை விரிவாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்., 31க்குள், அனைவருக்கும் முதற்கட்ட தடுப்பூசி போட்டு முடிக்கும் வகையில், வாரம் 50 லட்சம் தடுப்பூசிகளை, தமிழகத்திற்கு வழங்கும்படி, மத்திய சுகாதாரத் துறைக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8+ 6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
21-செப்-202122:27:09 IST Report Abuse
Duruvesan Susai செங்கல்பட்டுல வூசி தயாரிப்போம்னு சொன்னது 😜😜😜, சும்மா கண்டி எதுனா அடிச்சி வுடு டெய்லி, ஹிந்து அடிமைஸ் நம்பிடும்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
21-செப்-202116:37:14 IST Report Abuse
unmaitamil வாரம் ஐம்பது லட்சம் வாங்கி என்னபன்ன போற? மத்திய அரசுக்கு தெரியும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு தடுப்பூசி தரவேண்டும் என்று. ஓசியில் கொடுப்பதை வாங்கி சேதமில்லாமல் செலவு செய் ராஜா. சும்மா ஏதாவது எழுத வேண்டும் என்று வெட்டித்தனமாக கடிதம் எழுதாதே.
Rate this:
Cancel
Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
21-செப்-202110:45:18 IST Report Abuse
Muthu Kumarasamy தடுப்பூசி விநியோகம் பற்றி குறை சொல்லுவதை தமிழகம் மாத்திரம்தான். எதிலும் மத்திய அரசை குறை சொல்லும் மனப்பான்மையை காணமுடிகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X