கோஹ்லி அணி தோல்வி: கோல்கட்டா அபாரம்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021
Share
Advertisement
அபுதாபி: கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் வருண் சக்ரவர்த்தியின் சுழலில் சிக்கிய பெங்களூரு அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.ஐ.பி.எல்., தொடர் 14 வது சீசனின் இரண்டாவது கட்ட போட்டிகள் எமிரேட்சில் நடக்கின்றன. நேற்று அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு அணி, மார்கனின் கோல்கட்டா அணியை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி

அபுதாபி: கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் வருண் சக்ரவர்த்தியின் சுழலில் சிக்கிய பெங்களூரு அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.ஐ.பி.எல்., தொடர் 14 வது சீசனின் இரண்டாவது கட்ட போட்டிகள் எமிரேட்சில் நடக்கின்றன. நேற்று அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு அணி, மார்கனின் கோல்கட்டா அணியை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் ஸ்ரீகர் பரத், ஹசரங்கா என இருவரும் ஐ.பி.எல்., அரங்கில் அறிமுகம் ஆகினர். கோல்கட்டா அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகம் ஆனார்.



latest tamil news





கோஹ்லி 'அவுட்'



பெங்களூரு அணிக்கு கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. கோஹ்லி 5 ரன்னில் அவுட்டானார். அடுத்து படிக்கல், ஸ்ரீகர் பரத் இணைந்தனர். பெர்குசன், பிரசித் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார் படிக்கல். மறுபக்கம் சுனில் நரைன் பந்தில் பவுண்டரி விளாசினார் பரத்.

இதன் பின் நிலைமை திடீரென மாறியது. பெர்குசன் வீசிய 6வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த படிக்கல் (22), கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் 'கேட்ச்' கொடுத்து வெளியேறினார். போட்டியின் 9வது ஓவரை வீசிய ரசல், இரட்டை அடி கொடுத்தார். முதல் பந்தில் பரத்தை (16) வெளியேற்றினார். 4வது பந்தில் அபாயகரமான டிவிலியர்சை (0), போல்டாக்கினார்.


சபாஷ் வருண்



மறுபக்கம் தன் பங்கிற்கு சுழலில் மிரட்டினார் வருண். தனது இரண்டாவது ஓவரின் 4 வது பந்தில் மேக்ஸ்வெல்லை (10) போல்டாக்கிய வருண், அடுத்த பந்தில் ஹசரங்காவை 'டக்' அவுட்டாக்கினார். ஒரு கட்டத்தில் 51/2 என்ற நிலையில் இருந்த பெங்களூரு, அடுத்து 15 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழக்க, 66/7 என்ற மோசமான நிலைக்கு சென்றது. தொடர்ந்து சச்சின் பேபி (7), ஜேமிசன் (4), சிராஜ் (8) திரும்ப, பெங்களூரு அணி 19 ஓவரில் 92 ரன்னுக்கு சுருண்டது. கோல்கட்டா சார்பில் வருண் 3, ரசல் 3, பெர்குசன் 2 விக்கெட் சாய்த்தனர்.


latest tamil news





எளிய வெற்றி



எளிய இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணிக்கு வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இருவரும் ரன் மழை பொழிந்தனர். சுப்மன் கில் 48 ரன் எடுத்தார். கடைசியில் வெங்கடேஷ் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடிக்க, கோல்கட்டா அணி 10 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 94 ரன் எடுத்து 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. வெங்கடேஷ் (41), ரசல் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X