அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏழு பேர் விடுதலை விவகாரம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Updated : செப் 22, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஏழு பேர் விடுதலை விவகாரம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்சென்னை: 'தி.மு.க.,வின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஏழுபேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:ராஜிவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை, விடுதலை செய்ய பரிந்துரைத்து, அ.தி.மு.க., ஆட்சியில், 2018
ஏழு பேர் விடுதலை, விவகாரம்  பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


ஏழு பேர் விடுதலை விவகாரம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: 'தி.மு.க.,வின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஏழுபேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:ராஜிவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை, விடுதலை செய்ய பரிந்துரைத்து, அ.தி.மு.க., ஆட்சியில், 2018 செப்., 9ல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த பிப்., 2ம் தேதி, சட்டசபையில் கவர்னர் உரையாற்ற ஆரம்பிக்கும் போது, ஏழு பேர் விடுதலை குறித்து, எந்த முடிவும் எடுக்காததை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.இந்த சூழ்நிலையில், ஏழு பேரை விடுதலை செய்வதற்கான, தமிழக அரசின் பரிந்துரையை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பினார். ஏழு பேர் விடுதலை குறித்து, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. ஸ்டாலின் முதல்வரான பின், மே 19ம் தேதி, ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று, ஏழு பேரை விடுதலை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

முதல்வர் கடிதம் எழுதி 124 நாட்களான நிலையில், எந்தவித நடவடிக்கையும் இல்லாதது மன வேதனையை அளித்துள்ளது.இந்நிலையில், 'இந்த விஷயத்தில், புதிய கவர்னரிடம் அழுத்தம் கொடுக்க முடியாது' என்று சட்ட அமைச்சர் தெரிவித்திருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. அமைச்சரின் பேட்டியை பார்க்கும் போது, இதையும், 'நீட்' தேர்வு போல, தி.மு.க., அரசு நீர்த்துப் போக செய்து விட்டதா என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.தி.மு.க., - எம்.பி.,க்கள் வாயிலாக, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுத்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஏழு பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - Coimbatore ,இந்தியா
21-செப்-202121:55:11 IST Report Abuse
Krishnan நாட்டின் பிரதமரை கொடூரமாக வெடி குண்டு வைத்து கொலை செய்துவிட்டு, இவர்களின் மகள், மகன்கள் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள், இவர்களுக்கு வக்காலத்து வாங்க இங்கு இருக்கும் மந்திரிகளுக்கு என்ன தொடர்பு.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
21-செப்-202117:26:53 IST Report Abuse
J. G. Muthuraj இவருடைய ஸ்பெஷாலிட்டி என்னென்னா 'அழுத்தம்' என்ற சொல்லை அழுத்தி அழுத்தி சொல்பவதுதான்......அதென்ன 'போதிய' அழுத்தம்?...ஒரு காரியத்தை நான்கைந்து முறை சொன்னால் அழுத்தம் என்கிறார்....
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
21-செப்-202117:05:26 IST Report Abuse
Indhuindian கொலைகாரர்களுக்கு போட்டி போட்டு வக்காலத்து வாங்கறதை பாத்தா ஒரே புல்லரிக்குது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X