பொது செய்தி

தமிழ்நாடு

மனநல பட்டய பயிற்சி திட்டம் துவக்கினார் சைலேந்திரபாபு

Updated : செப் 22, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை :காவல் துறையில் பணிபுரியும் 1.30 லட்சம் பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த, மூன்று லட்சம் பேருக்கு, மனநல பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி, 27. இவர், சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். செப்., 4ல், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்தவர், துப்பாக்கியால்
 மனநல பட்டய பயிற்சி திட்டம் ,துவக்கினார் சைலேந்திரபாபு

சென்னை :காவல் துறையில் பணிபுரியும் 1.30 லட்சம் பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த, மூன்று லட்சம் பேருக்கு, மனநல பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி, 27. இவர், சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். செப்., 4ல், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்தவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.இவர், 'ஆன்லைன்' சூதாட்டத்தில் 7 லட்சம் ரூபாயை இழந்ததால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதேபோல, சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர், பிளேடால் கையை கிழித்து உள்ளார்.

ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் இளம் போலீசார், குடும்ப பிரச்னை, காதல் தோல்வி, அதிகாரிகளின், 'டார்ச்சர்' உள்ளிட்ட காரணங்களால், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தீர்வு காண வேண்டும் என்று சமீபத்தில் நம் நாளிதழிலில், 'டீ கடை பெஞ்சு' பகுதியில் தகவல் வெளியாகி இருந்தது.

இதன் எதிரொலியாக, 1.30 லட்சம் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று லட்சம் பேருக்கு, நிறைவு வாழ்வுக்கான மனநல பயிற்சி அளிக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்படும், தேசிய மனநல மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில், 112 போலீசார் மற்றும் 134 மனநல ஆலோசகர்களுக்கு, மூன்று மாதங்கள் 'ஆன்லைன்' வாயிலாக, பட்டய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பின், அவர்கள் வாயிலாக, 1.30 லட்சம் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த, மூன்று லட்சம் பேருக்கு மனநல பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சி, காவலர் நலன் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சைலேஷ் யாதவ் மேற்பார்வையில் நடக்க உள்ளது. மனநல பட்டய பயிற்சி அளிக்கும் திட்டத்தை, ஆன்லைன் வாயிலாக டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று துவக்கினார். பயிற்சி குறித்து, தேசிய மனநல மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பிரதிமா மூர்த்தி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
21-செப்-202117:08:43 IST Report Abuse
Duruvesan கன்னடத்துல மாதாடினா நம்பில்கி மாலும் நஹி, வாடு தெலுகு maadlaaduthaaraa? இல்லி ellrum NEET ஸ்டுடென்ட், பரவாகி இல்லவா,
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
21-செப்-202112:58:39 IST Report Abuse
Sivagiri சைடு பிசினெஸ்ஸா ? - - - போலீசில் சேரும்போதே பயிற்சி கொடுக்க வேண்டியதுதானே . . .
Rate this:
Cancel
21-செப்-202111:19:18 IST Report Abuse
அப்புசாமி இதெல்லாம் இருக்கட்டும். போலீஸ் பொய் சொல்லுதுன்னு மாஜி அமைச்சர் வீரணி சொல்றாரு. அதுக்கு விளக்கம் குடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X