பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள்

Added : செப் 20, 2021
Share
Advertisement
அரசியல் பிரமுகர்களிடம் விசாரணைபுதுடில்லி: உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.,யும், முன்னாள் அமைச்சருமான ஆசம் கான், 72, பிரபல தாதாவும் எம்.எல்.ஏ.,வுமான முக்தர் அன்சாரி, 58, மற்றும் அதீக் அகமது ஆகியோர் பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் மீது தனித்தனி பண மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து, சிறையில்

அரசியல் பிரமுகர்களிடம் விசாரணை

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.,யும், முன்னாள் அமைச்சருமான ஆசம் கான், 72, பிரபல தாதாவும் எம்.எல்.ஏ.,வுமான முக்தர் அன்சாரி, 58, மற்றும் அதீக் அகமது ஆகியோர் பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் மீது தனித்தனி பண மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து, சிறையில் இருக்கும் மூவரிடமும் பண மோசடியில் அவர்கள் மற்றும் கூட்டாளிகள் பங்கு குறித்த விசாரணையைத் துவங்க உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

வேளாண் நிறுவன அதிகாரி கைது

புதுடில்லி: மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வேளாண் நிறுவனமான 'அஷர் அக்ரோ லிமிடெட்' நிர்வாக இயக்குனர் வினோத் சதுர்வேதி. இவர் 15 போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை தயார் செய்து, அவற்றின் பெயரில் வங்கியில் 915.65 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், வினோத் சதுர்வேதி சமீபத்தில் கைதானார். மோசடி தொடர்பாக அவரிடம், நீதிமன்ற அனுமதியுடன் விசாரணை நடத்தி வருவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுடன் ஓம் பிர்லா

கோட்டா: ராஜஸ்தானின் கோட்டாவில் இருந்து வெற்றி பெற்றவர் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா. இதனால், கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களை போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வதற்காக, தங்குமிடத்துடன் இலவச பயிற்சியை தன் தொகுதியில் வழங்கி வருகிறார். இந்த மையத்திற்கு நேற்று முன்தினம் சென்ற ஓம் பிர்லா, அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மாணவியருக்கு திறன் பயிற்சி

புதுடில்லி: தேசிய மகளிர் ஆணையம் சார்பில் பெண்கள் சுய வேலை வாய்ப்பு திட்டத்தை ஊக்குவிக்க மத்திய, மாநில பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, பெண்களுக்கான திறன் மற்றும் ஆளுமை மேம்பாடு, தொழில்முறை வளர்ச்சி, 'டிஜிட்டல்' கல்வி, வேலை வாய்ப்புகளை பெறுதல் உள்ளிட்டவை தொடர்பான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் ஹரியானா மத்திய பல்கலையில் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.

நக்சல் முகாமில் வெடிகுண்டு கட்சி

ரோலி: மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டம் மட்வேலி வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் மீது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது நக்சல்கள் அங்கிருந்து தப்பினர். போலீசாரின் சோதனையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மற்றும் குக்கர் குண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவற்றை போலீசார் செயலிழக்க செய்தனர்.

ஒய்.எஸ்.ஆர்.காங்., வெற்றி

அமராவதி: ஆந்திராவில் விசாகப்பட்டினம், நெல்லுார், பிரகாசம் உட்பட 13 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதன் முழுமையான முடிவுகள் நேற்று வெளியான நிலையில் ஆட்சியில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் மாவட்ட கவுன்சிலர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளனர்.

போதை பொருள் பறிமுதல்

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் சுற்றுப்பகுதிகளில் மட்டும் கடந்த ஓராண்டில் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக 114 வழக்குகள் பதிவாகி உள்ளதுடன் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த 34 பேர் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் சிலரும் அடங்குவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X