அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில், தமிழகம் முழுதும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம், நேற்று நடைபெற்றது.'வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்; பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்;'பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின்
 தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை-மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில், தமிழகம் முழுதும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம், நேற்று நடைபெற்றது.'

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்; பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்;'பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை அறிவாலயம் முன், தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராசா தலைமையில், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சி.ஐ.டி., காலனியில், தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., நிலைப்பாடுநிருபர்களிடம், அவர் கூறியதாவது:காங்கிரஸ் ஆட்சியில் அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றியபோது, பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, பா.ஜ., அரசு தினமும் விலையை உயர்த்தி வருகிறது.

இதனால், விலைவாசி அதிகரித்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் பற்றி, தி.மு.க., தலைமை முடிவெடுக்கும். ஊரக உள்ளாட்சி தேர்தலில், மகளிருக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதேபோல சட்டசபை, லோக்சபா தேர்தலிலும் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வர வேண்டும் என்பது தி.மு.க., நிலைப்பாடு.இவ்வாறு கனிமொழி கூறினார்.சென்னை, தேனாம்பேட்டை, அன்பகம் முன், இளைஞரணி செயலர் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருப்புக் கொடிசென்னை, சத்தியமூர்த்தி பவன் முன், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி; அண்ணா நகரில் தன் வீட்டின் முன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ; அசோக் நகர் கட்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கறுப்புக் கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, மண்ணடியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சி அலுவலகம் முன், மாநில பொதுச்செயலர் முகமது அபுபக்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ellar - New Delhi,இந்தியா
21-செப்-202109:39:45 IST Report Abuse
ellar அப்படியே முன்பு அரசு ஆரம்பித்த 1. டீவி சேனல் தான் இருக்க வேண்டும்... தனியாருக்கு கொடுத்ததால் நாட்டு மக்கள் குட்டிச் சவர் ஆகிவிட்டனர் 2. கல்விச் சாளைகள் அரசு தான் நடத்த வேண்டும்... தனியார் வியாபார ரீதியாக நடத்துவதால் அரசுடமை யாக்குவது அவசரம் 3. சுதந்திரம் வாங்கிய போது இருந்த எண்ணிக்கை யில் மட்டும் கட்சிகள், சங்கங்கள் இருக்க வேண்டும் இவைகளையும் சேர்த்து போராடினால் நலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X