அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் பா.ஜ., விழிப்புணர்வு

Added : செப் 20, 2021
Share
Advertisement
சென்னை-மத்திய அரசு சார்பில் வழங்கப்படும், கூடுதல் இலவச அரிசி வினியோகம் குறித்து, ரேஷன் கடைகளுக்கு வரும் கார்டுதாரர்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் பா.ஜ.,வினர் ஈடுபட்டு உள்ளனர்.பல மாநிலங்களில், ஏப்ரல், மே மாதங்களில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ரேஷனில் ஏற்கனவே வழங்கும் தானியங்களுடன், மே, ஜூனில் கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக தலா, 5

சென்னை-மத்திய அரசு சார்பில் வழங்கப்படும், கூடுதல் இலவச அரிசி வினியோகம் குறித்து, ரேஷன் கடைகளுக்கு வரும் கார்டுதாரர்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் பா.ஜ.,வினர் ஈடுபட்டு உள்ளனர்.

பல மாநிலங்களில், ஏப்ரல், மே மாதங்களில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ரேஷனில் ஏற்கனவே வழங்கும் தானியங்களுடன், மே, ஜூனில் கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக தலா, 5 கிலோ தானியம் இலவசமாக வழங்க, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.இத்திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, தமிழகத்தில் உள்ள கார்டுதாரர்களுக்கு வழங்க, மத்திய தொகுப்பில் இருந்து மாதம், 1.80 லட்சம் டன் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி வினியோகம் குறித்து, தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தெரிவதில்லை.

இதனால், அந்த அரிசி வினியோகத்தில் கடை ஊழியர்களும், கூட்டுறவு சங்க அதிகாரிகளும் முறைகேடு செய்கின்றனர்.இந்நிலையில், கூடுதல் அரிசி வினியோகம் தொடர்பாக, கார்டுதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், ரேஷன் கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X