அரசியல் செய்தி

தமிழ்நாடு

தியாகராஜனின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

Added : செப் 20, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை-''உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., - பா.ஜ., இடையேயான இடபங்கீடு முடியும் தருவாயில் உள்ளது. எங்கள் கூட்டணியில் கூச்சல், குழப்பம், சண்டை இல்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:மத்திய அரசுக்கு எதிராக, நாடு முழுதும் உள்ள எதிர்க்கட்சிகள், விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளன. மத்தியில், தி.மு.க., அங்கம்
 தியாகராஜனின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை-''உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., - பா.ஜ., இடையேயான இடபங்கீடு முடியும் தருவாயில் உள்ளது. எங்கள் கூட்டணியில் கூச்சல், குழப்பம், சண்டை இல்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:மத்திய அரசுக்கு எதிராக, நாடு முழுதும் உள்ள எதிர்க்கட்சிகள், விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளன. மத்தியில், தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்தது.அப்போது, உணவு பொருட்கள் பணவீக்கம் 12 சதவீதத்தை தாண்டியது. இது, பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், 6 சதவீதத்திற்கு கீழ் குறைந்தது.பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

பொதுத்துறை நிறுவனங்களை, தனியார் துறைக்கு அரசு தாரைவார்க்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தான், அந்த நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன.பெட்ரோல், டீசல் விலை உயரும் போது சாமானியர்கள் பாதிக்கின்றனர். எனவே, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜி.எஸ்.டி., வரியில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எந்த வஞ்சகமும் செய்யவில்லை.பெட்ரோல், டீசல் விற்பனையை, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. இதுவே, எங்கள் விருப்பம். இதனால், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இழப்பு ஏற்படும். தமிழக அரசு, பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு, தமிழக நிதி அமைச்சர் செல்லாமல், அவர் அளிக்கும் பதில் வியப்பாக உள்ளது.எதிர்க்கட்சியாக இருந்த போது, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் வர வேண்டும் என்று கூறிய தி.மு.க., தற்போது, ஆளுங்கட்சியாக வந்ததும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இதற்கான காரணத்தை, அக்கட்சி தெரிவிக்க வேண்டும்.தமிழக நிதி அமைச்சர் தியாகராஜனின் பேச்சும், அவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துக்களும் கண்டிக்கத்தக்கவை.தி.மு.க., தவிர, மற்ற அனைத்து கட்சியினரையும், அவர் கடுமையாக விமர்ச்சிகிறார். அவர் மீது, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., இட பங்கீடு முடியும் தருவாயில் உள்ளது. எங்கள் கூட்டணியில் கூச்சல், குழப்பம், சண்டை இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., இருக்கிறது.பா.ம.க., உள்ளாட்சி தேர்தலில் தனியாக நிற்பதாக தெரிவித்துள்ளது. பா.ம.க., உடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பலமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
21-செப்-202118:47:01 IST Report Abuse
J. G. Muthuraj PTR ன் பெர்பாமன்ஸ் பலரையும் கவர்ந்திருக்கிறது....பலர் அதைவெளியே சொல்வதில்லை .....திமுகவில் ஒருவரையொருவர் அழிக்கும் POWER CONFLICT எழவில்லையென்றால், அடுத்த தேர்தலில் இவரின் செல்வாக்கு ஓங்கும்....பிஜேபி சற்று கவனமாக இருக்கவேண்டும்.....என்னதான் இருபது வருஷம் வெளிநாட்டில இருந்தாலும், 'மர்ரக்காரன்' நக்கல் PTR இடம் இருந்து போகவில்லை.....சுதந்திர காலகட்டத்தில், அவருடைய தாத்தாவோ, பூட்டனோ நடத்திய ஆஸ்பத்திரி கட்டடம் முன் அக்காலத்து டிவிஎஸ் பஸ் ஸ்டாப் இருந்தது..... அந்த ஆஸ்பத்திரியை மூடி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன....இன்றும், நகர் பேருந்தில், 'இராஜன் ஆஸ்பத்திரி' இறங்கு என்று கண்டக்டர் சத்தம் கேட்கும்......என்னங்க ஆஸ்பத்திரியை இல்லையே என்றால், இதை விளக்க பேருந்தில் ஒரு பத்து பயணிகளாவது இருப்பார்கள்.....மலை 'மர்ரை' யோடு நேரடியாக மோதாமலிருப்பது நல்லது....
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
21-செப்-202117:37:22 IST Report Abuse
Rajas சாலை மேம்பாட்டு வரி என்று பெட்ரோலில் ரூபாய் 18 வரை போட்டு மத்திய அரசு வசூலிக்கிறது. ithuve கொள்ளை. அப்புறம் எதற்கு தனியாக டோல்கேட் வரி
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
21-செப்-202117:16:45 IST Report Abuse
Rajas 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் செஸ் வரி ரூ.10 எனவும், டீசல் வரி ரூ. 5 எனவும் இருந்தது. தற்போது பெட்ரோல் வரி ரூ. 32, டீசல் வரி ரூ.31 ஆக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கும் செஸ் வரியை கைவிட்டால் ஜி.எஸ்.டி பற்றி பேசலாம் என்று தியாகராஜன் சொன்னது சரியா
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
21-செப்-202121:55:39 IST Report Abuse
Davamani Arumuga Gounderஇந்தியாவின் தலைசிறந்த பொருளாதார மேதை Rajas - chennai,இந்தியா.. அவர்களே அதிகபட்சமான ஞானசூன்யம் நீ தானோ?.. மத்திய அரசு பெட்ரோலில் வசூலிக்கும் அதிகபட்ச வரியே ரூ.18 தான் என்றும், தமிழகத்தின் வரி ரூ. 38/ என்றும் வெள்ளை அறிக்கையில் இந்த தியாகராஜன் ஏன் கூறவில்லை? முதலில் அதைக்கேள்.. இல்லைனா .. பெட்ரோலுக்கு மத்திய அரசின் வரி எவ்வளவு, மாநில அரசின் வரி எவ்வளவு என்பதை அறிந்துகொண்டு பேசு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X