அரசியல் செய்தி

தமிழ்நாடு

வங்கியில் ரூ.40 கோடி கடன் உள்ளது முன்னாள் அமைச்சர் வீரமணி புலம்பல்

Added : செப் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பத்துார்-''எனக்கு வங்கியில், 40 கோடி ரூபாய் கடன் உள்ளது. ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்திருக்கிறேன்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி கூறினார்.திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணியின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான 35 இடங்களில், 16ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில்,
 வங்கியில் ரூ.40 கோடி கடன் உள்ளது முன்னாள் அமைச்சர் வீரமணி புலம்பல்

திருப்பத்துார்-''எனக்கு வங்கியில், 40 கோடி ரூபாய் கடன் உள்ளது. ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்திருக்கிறேன்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி கூறினார்.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணியின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான 35 இடங்களில், 16ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில், நகை, கார், மணல் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக வீரமணி மீது, வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், திருப்பத்துாரில் முன்னாள் அமைச்சர் வீரமணி, நேற்று கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில், எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தவறான செய்திகள் வருகின்றன. பத்திரிகை தர்மம் உள்ளது; ஆதாரத்துடன் செய்திகளை வெளியிடுங்கள். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், என் வீட்டில் பணமோ, கிலோ கணக்கில் நகையோ கைப்பற்றப்படவில்லை. என்னிடம் கைப்பற்றிய 5,600 ரூபாய் மற்றும் 500 சவரன் நகைக்கு கணக்கு உள்ளது என்பதால், திருப்பி கொடுத்து விட்டனர். கார் பழமையானதுநான், ஏழாவது படிக்கும் போதே என் தந்தை, 'பென்ஸ்' கார் வாங்கி கொடுத்தார். நான் தற்போது வைத்திருக்கும் ரோல்ஸ் ராய் கார் மிகவும் பழமையானது. அதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய் தான் இருக்கும். சிறு வயதில் இருந்தே கார் வாங்கி வருவது எனக்கு பழக்கம். பள்ளியில் படிக்கும் போதே, ஜெர்மன் மெர்சிடீஸ் பென்ஸ் கார் வைத்திருந்தேன். நான் நடத்திய பீடித் தொழில் மற்றும் விவசாயத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்துள்ளனர். என் இரு மனைவியரும் வசதி படைத்தவர்கள். வீட்டின் பின்புறம், வீடு கட்டுவதற்காக மணல் வாங்கி வைத்திருந்தேன். அதற்கு ரசீதும் என்னிடம் உள்ளது. அமெரிக்க டாலர், 1. 75 லட்சம் மதிப்புள்ளது மட்டுமே கைப்பற்றப்பட்டது.

என் மகள் ஆஸ்திரேலியாவில் படிக்கச் செல்வதால் சட்ட விதிகள் படியே வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருந்தேன். 5,000 டாலர்கள் வரை வைத்துக் கொள்ளலாம் என சட்டம் உள்ளது. தவறான தகவல்நான் எதையும் மறைக்கவில்லை. நான் ஆடம்பரத்தை விரும்பாதவன், மிகவும் எளிமையானவன். கட்டி கட்டியாக தங்கம், வைரம் எல்லாம் எங்களுக்கு எதற்கு. எனக்கு வங்கியில், 40 கோடி ரூபாய் கடன் உள்ளது. பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நான் வருமான வரி கட்டி வருகிறேன். ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்திருக்கிறேன். சமூக வலைதளத்தில் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
21-செப்-202115:52:30 IST Report Abuse
jayvee கடன் இருப்பதால் ஊழல் செய்யவில்லை என்று அர்த்தமில்லை. சொத்தே இல்லாமல் சொந்தமாக கார் கூட இல்லாமல் பல லட்சம் கோடிகள் ஊழல் செய்துள்ள தலைவர்கள் இந்த நாட்டில் உள்ளனர்
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
21-செப்-202107:56:51 IST Report Abuse
suresh kumar //பத்திரிகை தர்மம் உள்ளது ஆதாரத்துடன் செய்திகளை வெளியிடுங்கள். ..// உங்கள் தரப்பில் நியாயம் இருந்தால், அவதூறு வழக்கு தொடருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X