தி.மு.க., துாக்கி வீசப்படும்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., துாக்கி வீசப்படும்'

Added : செப் 20, 2021 | கருத்துகள் (2)
Share
ஆத்துார்-''தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் தி.மு.க., விரைவில் துாக்கி வீசப்படும் நிலை வரும்,'' என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம் கூறினார்.சேலம் மாவட்டம் ஆத்துார், பழையப்பேட்டை முஸ்லிம் பள்ளிவாசல் அருகிலிருந்த பா.ஜ., கொடிக்கம்பம், ௧8ம் தேதி உடைக்கப்பட்டது. நேற்று அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம் பார்வையிட்டு புகார் தொடர்பான
 'தி.மு.க., துாக்கி வீசப்படும்'

ஆத்துார்-''தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் தி.மு.க., விரைவில் துாக்கி வீசப்படும் நிலை வரும்,'' என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம் கூறினார்.

சேலம் மாவட்டம் ஆத்துார், பழையப்பேட்டை முஸ்லிம் பள்ளிவாசல் அருகிலிருந்த பா.ஜ., கொடிக்கம்பம், ௧8ம் தேதி உடைக்கப்பட்டது. நேற்று அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம் பார்வையிட்டு புகார் தொடர்பான நடவடிக்கை குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.அப்போது, அவர் கூறியதாவது: முஸ்லிம் பள்ளிவாசல் அருகில் உள்ள, பா.ஜ., கொடிக்கம்பம், சின்னத்தை உடைத்துள்ளனர். இதில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

புகார் அளித்த பின், மாவட்ட, நகர நிர்வாகிகளுக்கு போனில் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். வரும், 25க்குள் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், 26ல், ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாயத்தினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம்.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தமிழகம் முழுதும் பல்வேறு வகைகளில் அடக்கு முறையில் ஈடுபட்டுள்ளனர். கோவை சரகத்திலும் இதேபோல் நடந்துள்ளதால், இன்று போராட்டம் நடத்தவுள்ளோம். ஸ்டாலின் ஆட்சி, மத்திய அரசுக்கு எதிராக தான் செயல்பட்டு வருகிறது. தி.மு.க., விரைவில் துாக்கி வீசப்படும் நிலை வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X