அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க., முதல் பட்டியல்

Added : செப் 20, 2021
Share
Advertisement
சென்னை-ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை, அ.தி.மு.க., நேற்று வெளியிட்டது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது.அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த பா.ம.க., தனித்து போட்டியிடுவதாக

சென்னை-ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை, அ.தி.மு.க., நேற்று வெளியிட்டது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது.அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த பா.ம.க., தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. பின், இடம் பங்கீடு தொடர்பாக, அ.தி.மு.க., - பா.ஜ., இடையே நேற்று முன்தினம் பேச்சு நடந்தது. பா.ஜ., தரப்பில், அனைத்து மாவட்டங்களிலும், 25 சதவீதம் இடம் கேட்கப்பட்டது.

அ.தி.மு.க., தரப்பில் பா.ஜ.,வுக்கு செல்வாக்கு உள்ள இடங்களை ஒதுக்கி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று மாலை இரண்டாவது நாளாக பேச்சு நடந்தது. ஒரு சில மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் உடன்பாடு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., சார்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், தென்காசி மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர்களை, அ.தி.மு.க., அறிவித்துள்ளது. சில வார்டுகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அவை பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார்; ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், திமிரி, வாலாஜா ஊராட்சி ஒன்றியங்களுக்கு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், கரணை, விக்கிரவாண்டி, கோலியனுார், கண்டமங்கலம், ஒலக்கூர், மயிலம், மரக்காணம், வானுார், செஞ்சி, வல்லம், மேல்மலையனுார் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதேபோல், இடைத்தேர்தல் நடக்கும், மாவட்ட ஊராட்சி வார்டு மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டுகளில், 12 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும், 37 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும், அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X