மின் உபகரணம் கொள்முதல் வாரியம் புதிய நிபந்தனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் உபகரணம் கொள்முதல் வாரியம் புதிய நிபந்தனை

Added : செப் 20, 2021
Share
சென்னை-குறைந்த விலைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ய, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்கள் வாங்கும் விலையை ஒப்பிட்டு பார்க்கும்படி, பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.மின் வினியோகம் செய்ய, டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி, கேபிள், மீட்டர், மின் கம்பி உள்ளிட்ட உபகரணங்களை, இணையதள 'டெண்டர்' வாயிலாக, தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின் வாரியம்

சென்னை-குறைந்த விலைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ய, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்கள் வாங்கும் விலையை ஒப்பிட்டு பார்க்கும்படி, பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின் வினியோகம் செய்ய, டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி, கேபிள், மீட்டர், மின் கம்பி உள்ளிட்ட உபகரணங்களை, இணையதள 'டெண்டர்' வாயிலாக, தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின் வாரியம் வாங்குகிறது.அதிக எண்ணிக்கையிலான உபகரணங்கள், தலைமை அலுவலகத்தில் உள்ள பொருட்கள் மேலாண்மை பிரிவில் இருந்து வாங்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதுதவிர, மாவட்ட அலுவலகங்களிலும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இதற்காக ஆண்டுதோறும், பல நுாறு கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், தங்களுக்குள் கூட்டணி அமைத்து, ஒரே விலையில் வழங்குகின்றன. அதிகாரிகள் விலை குறைப்பு பேச்சு நடத்துவதாக கூறி, நிறுவனங்கள் குறிப்பிட்டிருக்கும் விலையையே ஏற்கின்றனர்.இதற்காக அதிகாரிகளை, நிறுவனங்கள், 'கவனிப்பு' செய்வதாக புகார்கள் எழுகின்றன. மின் வாரிய நிதி நிலைமை மோசமாக இருப்பதற்கு, அதிக விலைக்கு உபகரணங்கள் வாங்குவதும் முக்கிய காரணம்.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், ஒரே மாதிரியான விலையை குறிப்பிடுகின்றன.

இதுவரை, அதற்கு முன் அந்த உபகரணம் என்ன விலைக்கு வாங்கப்பட்டது; இங்குள்ள சந்தையை விலையை மட்டும் பொறியாளர்கள் கணக்கில் கொள்கின்றனர்.இனி, ஒவ்வொரு உபகரணத்திற்கும் டெண்டர் கோரும் போது, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநில வாரியங்கள், என்ன விலைக்கு வாங்கியுள்ளன என்பதை ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப வாங்க உத்தர விடப்பட்டு உள்ளது.இதனால், குறைந்த விலைக்கு தரமான உபகரணங்கள் வாங்குவது உறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X