அரசியல் செய்தி

தமிழ்நாடு

உற்பத்தி ஊக்கத் தொகை திட்டம் ரூ.45 ஆயிரம் கோடி கிடைக்கும்

Added : செப் 20, 2021
Share
Advertisement
சென்னை--''வாகன உற்பத்தித் துறையில், உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில் 45 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும்,'' என, மத்திய கனரக தொழில் துறை செயலர் அருண் கோயல் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், 26 ஆயிரத்து 58 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி

சென்னை--''வாகன உற்பத்தித் துறையில், உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில் 45 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும்,'' என, மத்திய கனரக தொழில் துறை செயலர் அருண் கோயல் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், 26 ஆயிரத்து 58 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.இந்த சலுகை வாயிலாக, வாகனத் துறையில் ஐந்து ஆண்டுகளில் 45 ஆயிரம் கோடி ரூபாய் வரை, புதிய முதலீடுகள் கிடைக்கும். இதில், 2.3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மான உற்பத்தி பெறப்படும்.

மேலும், 7.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.இந்த திட்டத்தில், நான்கு சக்கர வாகன உற்பத்தியில் 2,000 கோடி ரூபாய்; இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் 1,000 கோடி ரூபாய் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, அதற்கேற்ப ஊக்கத் தொகை வழங்கப்படும்.ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கும், புதிய நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகையில் வேறுபாடு இருக்கும். மாநிலம் வாரியாக ஊக்கத் தொகை வழங்குவதிலும், அவர்களின் பங்கு பற்றியும் குறிப்பிட முடியாது.

மேலும், 'போர்டு' கார் நிறுவனம் போன்ற குறிப்பிட்ட நிறுவனங்கள் குறித்தும் கூற முடியாது. இந்த ஊக்கத் தொகைத் திட்டம், துறை சார்ந்தது. இதில், ஒரு நிறுவனம் பயனடையும்; ஒரு நிறுவனம் பயன் பெறாது. அனைத்து நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிக்கக் கூடிய திட்டமே தவிர, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கானது இல்லை.இவ்வாறு அருண் கோயல் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X