பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் வந்தது 1.75 லட்சம் தடுப்பூசி

Added : செப் 20, 2021
Share
Advertisement
சென்னை-தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 1.75 லட்சம் 'கோவாக்சின்' தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.கொரோனா மூன்றாவது அலை அடுத்த மாதத்தில் துவங்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.மேலும், இரண்டு கட்டங் களாக மெகா தடுப்பூசி

சென்னை-தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 1.75 லட்சம் 'கோவாக்சின்' தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கொரோனா மூன்றாவது அலை அடுத்த மாதத்தில் துவங்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.மேலும், இரண்டு கட்டங் களாக மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டன. அதில், முதற்கட்டத்தில் 28.91 லட்சம் தடுப்பூசிகளும்; இரண்டாம் கட்டத்தில் 16.43 லட்சம் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.

இதை தவிர, தினசரி மூன்று முதல் ஐந்து லட்சம் வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதனால், தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் இருந்து 1.75 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் நேற்று தமிழகம் வந்தன. அவற்றை மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கும் பணி துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X