பொது செய்தி

தமிழ்நாடு

90 அணைகளில் 128 டி.எம்.சி., நீர்

Added : செப் 20, 2021
Share
Advertisement
சென்னை-தென் மேற்கு பருவ மழையால், மாநிலம் முழுதும் உள்ள 90 அணைகளில், 128 டி.எம்.சி., நீர் கையிருப்பில் உள்ளது.மாநிலம் முழுதும் 90 அணைகளை, நீர்வளத் துறையினர் பராமரித்து வருகின்றனர். இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., இதில், மேட்டூர், பவானிசாகர், பரம்பிக்குளம் உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி., மற்ற அணைகள்,3 டி.எம்.சி.,க்கும் குறைவான கொள்ளளவு கொண்டவை.

சென்னை-தென் மேற்கு பருவ மழையால், மாநிலம் முழுதும் உள்ள 90 அணைகளில், 128 டி.எம்.சி., நீர் கையிருப்பில் உள்ளது.மாநிலம் முழுதும் 90 அணைகளை, நீர்வளத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., இதில், மேட்டூர், பவானிசாகர், பரம்பிக்குளம் உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி., மற்ற அணைகள்,3 டி.எம்.சி.,க்கும் குறைவான கொள்ளளவு கொண்டவை. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அணைகளுக்கு, தென் மேற்கு பருவ மழை வாயிலாக நீர்வரத்து கிடைத்து வருகிறது. ஜூன் முதல் தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. விரைவில் மழை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 90 அணைகளில் நீர் இருப்பு 128 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைகளின் மொத்த கொள்ளளவில் இது 57 சதவீதம். தென் மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யாததால், மணிமுக்தா நதி, விடூர், சின்னாறு, துள்பளஹள்ளி, வடக்கு பச்சையைாறு, கொடுமுடியாறு, வண்டல் ஓடை, சிறுமலையாறு ஓடை, ஆணைக்குட்டம். வெம்பக்கோட்டை, கோல்வார்பட்டி, இருக்கன்குடி, அப்பர் நீராறு, கொடகனாறு, ஒரத்துப்பாளையம், வட்ட மலைக்கரை ஓடை, சித்தாமல்லி, கரியகோவில், உப்பாறு உள்ளிட்ட பல சிறு அணைகள் வறண்ட நிலையில் உள்ளன. பருவ மழை முடிவதற்குள், இந்த அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நீர்வளத் துறையினர் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X