பொது செய்தி

தமிழ்நாடு

கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவு

Added : செப் 20, 2021
Share
Advertisement
சென்னை-ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் அக்., 2ல் கிராம சபை கூட்டம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை செயலர் கோபால், துறையின் இயக்குனருக்கு அனுப்பி உள்ள கடிதம்:காந்தி ஜெயந்தி தினமான அக்., 2ல், கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஊரக

சென்னை-ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் அக்., 2ல் கிராம சபை கூட்டம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை செயலர் கோபால், துறையின் இயக்குனருக்கு அனுப்பி உள்ள கடிதம்:காந்தி ஜெயந்தி தினமான அக்., 2ல், கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்கள்; மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள ஊராட்சிகள் தவிர்த்து, மற்ற ஊராட்சிகள் அனைத்திலும் கிராம சபை கூட்டம் நடத்தலாம்.

கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த, மாவட்ட கலெக்டர்கள் உரிய அறிவுரை வழங்க வேண்டும். கூட்டம் திறந்த வெளியில் நடத்தப்பட வேண்டும். கூட்டம் நடக்கும் பகுதி முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும்; கிருமி நாசினி தெளிக்க வேண்டும். திறந்த வெளியில் சாமியானா பந்தல் அமைக்க வேண்டும்.கூட்டத்தில் பங்கேற்போர் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். அதிக வெப்பநிலை உள்ளவர்களை அனுமதிக்கக் கூடாது.

மேலும், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை, கூட்டம் நடத்தும் பகுதியில் அனுமதிக்கக் கூடாது.சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் இடையே, 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். இருமல், காய்ச்சல், சளி இருப்பவர்களை கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டாம்.அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கூட்டம் காலை 10:00 மணிக்கு துவக்கப்பட்டு, பகல் 1:00 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X