சினி பிட்ஸ் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சினி பிட்ஸ்

Added : செப் 20, 2021
Share
தண்டோரா போட்ட படக்குழு'டுவிட்டர், இன்ஸ்டா' என காலம் நவீனமாக செல்ல, சூ மந்திரகாளி படக் குழுவினர், வரும் 24ல் படம் வெளியிடப்படுவதை, கிராமத்தில் தண்டோரா போட்டு அறிவித்துள்ளனர்.இதில், 50க்கும் மேற்பட்ட தண்டோரா கலைஞர்கள் மற்றும் குடுகுடுப்பைகாரர்கள் வாயிலாக, படம் வெளியாவதை வித்தியாசமான முறையில் அறிவித்தனர். கார்த்திகேயன் வேலு நாயகனாக நடிக்க, கன்னட நடிகை சஞ்சனா புர்லி
 சினி பிட்ஸ்

தண்டோரா போட்ட படக்குழு'டுவிட்டர், இன்ஸ்டா' என காலம் நவீனமாக செல்ல, சூ மந்திரகாளி படக் குழுவினர், வரும் 24ல் படம் வெளியிடப்படுவதை, கிராமத்தில் தண்டோரா போட்டு அறிவித்துள்ளனர்.இதில், 50க்கும் மேற்பட்ட தண்டோரா கலைஞர்கள் மற்றும் குடுகுடுப்பைகாரர்கள் வாயிலாக, படம் வெளியாவதை வித்தியாசமான முறையில் அறிவித்தனர். கார்த்திகேயன் வேலு நாயகனாக நடிக்க, கன்னட நடிகை சஞ்சனா புர்லி இப்படம் வாயிலாக தமிழுக்கு வருகிறார். படத்தை இயக்குனர் சற்குணம் வெளியிடுகிறார்.ஜகா வாங்கிய டாக்டர்கொரோனா முடக்கத்தை தாண்டி, தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், முதலில் வெளியான லாபம், தலைவி படங்கள், ரசிகர்களுக்கு கொரோனாவை போல சோதனையாக அமைந்தன. சமீபத்தில் வெளியான, துக்ளக் தர்பார், கோடியில் ஒருவன், அனபெல் சேதுபதி படங்களும் மக்களை ரொம்பவே சோதித்தன. தற்போது ஆயுத பூஜைக்கு விஷால், ஆர்யா நடித்த, எனிமி, அரண்மனை - 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை, ஐந்து நாட்களுக்கு முன் அக்., 9ல் வெளியிடுகின்றனர். இதற்குள் தியேட்டரில், 100 சதவீத அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் கோலிவுட்டில் அதிகரித்து வருகிறது.இளையராஜாவை சந்தித்த கமல்விக்ரம் படத்தில் நடித்து வரும் கமல், நேற்று முன்தினம் இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது ஸ்டூடியோவுக்கு சென்று சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக நடந்த இச்சந்திப்பில், இருவரும் ஒரு மணி நேரம் பேசியுள்ளனர்.நந்திதா ஸ்வேதா தந்தை மரணம்அட்டக்கத்தி, புலி, தேவி - 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நந்திதா ஸ்வேதாவின் தந்தை சிவசாமி, 54, திடீரென காலமானார். தன் தந்தை இறந்த செய்தியை டுவிட்டரில் தெரிவித்துள்ள நந்திதாவுக்கு, திரையுலகினர் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.யார் காதுல பூ...!திருமண வாழ்க்கையில் இருந்து மெல்ல வெளியேறுவது போல உள்ள சமந்தாவின் நடவடிக்கை, ரசிகர்களுக்கு தொடர்ந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் வார இறுதி நாள் கொண்டாட்டத்தை, நடிகையர் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, கல்யாணி ப்ரியதர்ஷினி ஆகியோருடன் கொண்டாடியுள்ளார். அனைவரும் காதில் பூ வைத்தபடி, 'போஸ்' கொடுத்துள்ளனர். இதன் வாயிலாக ஏதோ கூற வரும் சமந்தா, கணவர் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த, லவ் ஸ்டோரி படத்திற்கு டுவிட்டரில் வாழ்த்து கூட கூறவில்லை.வடிவேலு படத்தில் கீர்த்தி!வடிவேலு கதை நாயகனாக நடிக்க, லைக்கா தயாரிக்கும் படத்தை சுராஜ் இயக்க உள்ளார். இதில் முதன்மையான பெண் கதாபாத்திரத்தில் நடிக்க, முன்னணி நடிகையரிடம் பேச்சு நடந்தது. முதலில் ப்ரியா பவானி சங்கர் நடிப்பதாக கூறப்பட்டது. கால்ஷீட் பிரச்னையால் அவரால் நடிக்க முடியவில்லை. இந்நிலையில், கீர்த்தி சுரேஷிடம் பேசி வருகின்றனர். பெரிய சம்பளம், கால்ஷீட் தேதி என பேச்சில் இரு தரப்பும் 'பிசி'யாக உள்ளனர்.பெயரோடு கதையும் வித்தியாசம்அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள, 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்' படத்தை கே.குமார் தயாரித்துள்ளார். 'மிர்ச்சி' சிவா கதை நாயகனாக நடிக்க, அஞ்சு குரியன், மேகா ஆகாஷ் நாயகியராக நடிக்கின்றனர்.படப்பிடிப்பு நேற்று துவங்கியது. வித்தியாசமான பேண்டஸி காமெடி களத்தில் உருவாகும் இப்படத்தின் துவக்க விழாவில், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, டாக்டர் பிரபு திலக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேகா ஆகாஷ் கூறுகையில், ''எனக்கு மிகவும் வித்தியாசமான பாத்திரம். படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X