பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை நல பெட்டகம் மாணவிகளுக்கு வழங்கல்

Added : செப் 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை யோகா, இயற்கை மருத்துவ பிரிவு சார்பாக, வளர் இளம்பெண்களுக்கு ரத்தசோகையை போக்கும் வகையில் இயற்கை நல பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். உதவி மருத்துவ அலுவலர் ஜெயின்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் சத்தான இயற்கை உணவுகளை மறந்துவரும்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை யோகா, இயற்கை மருத்துவ பிரிவு சார்பாக, வளர் இளம்பெண்களுக்கு ரத்தசோகையை போக்கும் வகையில் இயற்கை நல பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். உதவி மருத்துவ அலுவலர் ஜெயின்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் சத்தான இயற்கை உணவுகளை மறந்துவரும் காரணத்தினால் வளரும் பருவத்தினருக்கு ரத்தசோகை ஏற்படுகிறது.ஆகவே காய்கறிகள், பழங்கள், கீரைகள், முளைவிட்ட தானியங்களை உணவாக எடுத்துகொள்ள வேண்டும். உடல், மனம், ஆன்மா ஆரோக்கியமாக வாழ யோகா பயிற்சி செய்ய வேண்டும்.இலவச ஆலோசனைக்கு104 தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அறிவுரை வழங்கப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X