பொது செய்தி

தமிழ்நாடு

தட்டுப்பாடின்றி உரம் வினியோகம்; நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை

Added : செப் 20, 2021
Share
Advertisement
சென்னை-சம்பா பருவ சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ள நிலையில், உர நிறுவனங்களுடன் வேளாண் துறையினர் ஆலோசனை நடத்தினர்.டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சம்பா பருவ நெல் சாகுபடி நடப்பது வழக்கம். மாநிலம் முழுதும் 30 லட்சம் ஏக்கருக்கு மேல் இப்பருவத்தில் சாகுபடி நடக்கும். இந்த காலத்தில் யூரியா உள்ளிட்ட உர வகைகளின் தேவை இருமடங்கு அதிகரிக்கும். பதுக்கலால் விலை

சென்னை-சம்பா பருவ சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ள நிலையில், உர நிறுவனங்களுடன் வேளாண் துறையினர் ஆலோசனை நடத்தினர்.

டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சம்பா பருவ நெல் சாகுபடி நடப்பது வழக்கம். மாநிலம் முழுதும் 30 லட்சம் ஏக்கருக்கு மேல் இப்பருவத்தில் சாகுபடி நடக்கும். இந்த காலத்தில் யூரியா உள்ளிட்ட உர வகைகளின் தேவை இருமடங்கு அதிகரிக்கும். பதுக்கலால் விலை உயர்வு மட்டுமின்றி, தட்டுப்பாடும் ஏற்படும்.தற்போது, சம்பா பருவ நெல் சாகுபடிக்கான ஏற்பாடுகளில், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

எனவே, சாகுபடி துவங்கும் முன், உரத் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்திற்கு தேவையான உரத்தை, மத்திய அரசு மாதந்தோறும் ஒதுக்குகிறது. இவற்றை, மத்திய அரசின் உர தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. வெளிநாடுகளில் இருந்தும் அவ்வப்போது, இறக்குமதி செய்யப்பட்டு உரம் வழங்கப்படுகிறது.

தமிழகத்திற்கு உரம் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன், வேளாண் துறை உயர் அதிகாரிகள் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினர். அக்., முதல் டிசம்பர் வரை சம்பா பருவ சாகுபடி காலத்தில், தட்டுப்பாடின்றி உர வகைகளை வழங்கும்படி இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சாகுபடி இலக்கு அதிகரிக்கப்பட இருப்பதால், மாதந்தோறும் யூரியா மட்டும் 50 ஆயிரம் டன்னுக்கு மேல் வழங்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X