கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் சொத்து துஷ்பிரயோகம் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : செப் 20, 2021
Share
Advertisement
சென்னை-கோவில் சொத்துக்கள் துஷ்பிரயோகத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் தாக்கல் செய்த மனு:வில்லிவாக்கத்தில் அகத்தீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 3,227 சதுர அடி நிலத்தில், என் தந்தை கட்டடம் கட்டினார்.

சென்னை-கோவில் சொத்துக்கள் துஷ்பிரயோகத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் தாக்கல் செய்த மனு:வில்லிவாக்கத்தில் அகத்தீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 3,227 சதுர அடி நிலத்தில், என் தந்தை கட்டடம் கட்டினார். மேல்முறையீடு'செட்டில்மென்ட்' பத்திரத்தின்படி, இந்தச் சொத்து என் வசம் உள்ளது. இதற்கான வாடகையை செலுத்தி வருகிறேன். என் பெயருக்கு மாற்றம் செய்து தர அறநிலையத் துறையிடம் கேட்டேன்.கோவில் சொத்தில், சட்டவிரோதமாக கட்டடம் கட்டக்கூடாது என தடை கோரி, அதிகாரிகள் தொடர்ந்த வழக்கு, நிலுவையில் உள்ளது.

2008ல், குத்தகையை அறநிலையத்துறை ரத்து செய்தது. இடத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. அதை எதிர்த்து, தடை கோரி மேல்முறையீடு செய்தேன்.தற்போது, அறநிலையத்துறை முதன்மை செயலர் முன், மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. தடை உத்தரவு ஏதும் இல்லாததால், என்னை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். எனவே, தடை கோரிய மனுவை பைசல் செய்ய, அறநிலையத்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, ''குத்தகை உரிமை பெற்றிருப்பதற்கான ஆவணங்கள் எதையும் மனுதாரர் வைத்திருக்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட வாடகை தொகை 50.40 லட்சம் ரூபாயை மனுதாரர் செலுத்தவில்லை. ''தனிப்பட்ட ஆதாயத்துக்காக கோவில் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார். உள்வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்துள்ளார்,'' என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரர் ஒரு ஆக்கிரமிப்பாளர் மட்டுமல்ல; தனிப்பட்ட ஆதாயத்துக்காக கோவில் சொத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். கோவில் சொத்தை பலருக்கு உள்வாடகைக்கு விட்டு, கணிசமான தொகையை சம்பாதித்துள்ளார்.லட்சக்கணக்கில் லாபம்கோவில் சொத்துக்களில் இருந்து எவ்வளவு பணம் வசூலித்துள்ளார்; எவ்வளவு நாட்களுக்கு இது தொடர்ந்துள்ளது என்பதை, அறுநிலையத் துறை அதிகாரிகள் ஆராய வேண்டும். அதுகுறித்து, விசாரணை நடத்த வேண்டும்.துஷ்பிரயோகம் நிரூபிக்கப்பட்டு, அதில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்தால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இருந்து, வாடகை செலுத்தாததும், குத்தகை கேட்டு விண்ணப்பிக்காததும் தெரிய வருகிறது. அதனால், அவரை ஆக்கிரமிப்பாளராகவே கருத வேண்டும்.சட்டவிரோதமாக கோவில் சொத்துக்களை அனுபவித்து வந்துள்ளார். லட்சக்கணக்கில் லாபம் அடைந்துள்ளார்.

எனவே, மனுதாரர் கோரிய நிவாரணம் நிராகரிக்கப்படுகிறது. வெளியேற்றும் நடவடிக்கையை அரசும், அறநிலையத் துறையும் எடுத்து, கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும். கோவிலுக்கு ஏற்பட்ட இழப்பை கணக்கிட வேண்டும். இழப்பை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.கோவில் சொத்துக்களை தவறாக நிர்வகிப்பதில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, தகுந்த நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X