சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் கார் முன் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி

Added : செப் 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தனது மகனை கணவரிடம்இருந்து மீட்டுத்தரக் கோரி, கலெக்டர் வந்த கார் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் போலீசார் விசாரிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா நேற்று காரில் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது ஒரு பெண் காரின் முன் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை
 கலெக்டர் கார் முன் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தனது மகனை கணவரிடம்இருந்து மீட்டுத்தரக் கோரி, கலெக்டர் வந்த கார் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா நேற்று காரில் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது ஒரு பெண் காரின் முன் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.உடனடியாக டிரைவர் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்பெண்ணை தடுத்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். அவரது மனுவை கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தற்கொலைக்கு முயன்ற சூரன்கோட்டை ஊராட்சி சங்குமுத்துமாரி நகரைச் சேர்ந்த முனீஸ்வரி 27, கூறுகையில், 'எனக்கும் நயினார்கோவில் அருகேயுள்ள சித்தனேந்தல் நாகபாண்டிக்கும் 2013ல் திருமணமாகி 6 வயதில் மகன் உள்ளான். குடும்பபிரச்னை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறோம். தற்போது தாயார் வீட்டில் சூரன்கோட்டையில் வசிக்கிறேன்,

உடல்நலக்குறைவுள்ள மகனை நாகபாண்டி வைத்துக் கொண்டு தரமறுத்து, என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். மகனை மீட்டுத்தரக்கோரி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தும் பலனில்லை. இதனால் இறந்துவிடமுடிவு செய்துவிட்டேன்,' என்றார். தீக்குளிக்க முயன்ற முனீஸ்வரிடம் ராமநாதபுரம் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X