பொது செய்தி

தமிழ்நாடு

வைகை, பல்லவன் ரயில்கள் பாதியில் ரத்து

Added : செப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-மதுராந்தகம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி நடப்பதால், வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7:00 மணிக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ், நாளையும், 29ம் தேதியும் விழுப்புரத்துடன் ரத்து செய்யப்பட்டுள்ளதுசென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு மாலை 3:45 மணிக்கு இயக்கப்படும் பல்லவன்

சென்னை-மதுராந்தகம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி நடப்பதால், வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7:00 மணிக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ், நாளையும், 29ம் தேதியும் விழுப்புரத்துடன் ரத்து செய்யப்பட்டுள்ளதுசென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு மாலை 3:45 மணிக்கு இயக்கப்படும் பல்லவன் சிறப்பு ரயில், நாளையும், 29ம் தேதியும் எழும்பூர் - விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து மாலை 6:10 மணிக்கு காரைக்குடிக்கு இயக்கப்படும்புதுச்சேரியில் இருந்து எழும்பூர் வழியாக புதுடில்லிக்கு காலை 9:50 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், நாளையும், 29ம் தேதியும் பாதை மாற்றப்பட்டு, விழுப்புரம், காட்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படும். பெரம்பூருக்கு மாலை 3:25 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து 3:30 மணிக்கு புறப்படும். இந்த ரயிலில் எழும்பூரில் இருந்து பயணிக்க முன்பதிவு செய்தவர்கள், பெரம்பூரில் இருந்து பயணிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mupaco - Madurai,இந்தியா
21-செப்-202114:47:50 IST Report Abuse
mupaco சென்னையில் இருந்து பகலில் காலை ஏழு மணிக்கு முழுதும் இருக்கை வண்டியும், இரவில் ஒன்பது மணிக்கு முழுதும் படுக்கை வண்டியும் நெல்லைக்கு இருந்தால் நல்ல சேவை, மற்றும் வருமானமும் கூட.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X