பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு முத்திரைத்தாள் விற்பனை

Added : செப் 20, 2021
Share
Advertisement
சென்னை-தமிழகத்தில் சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக, சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக, முத்திரைத்தாள்கள் வாங்க வேண்டியது அவசியம். இதற்காக தமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில், 4,423 பேருக்கு முத்திரைத்தாள் விற்பனை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முத்திரைத்தாள் விற்பனைக்கான கமிஷனும் சேர்த்து தான், அவற்றின் மதிப்பு

சென்னை-தமிழகத்தில் சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக, சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக, முத்திரைத்தாள்கள் வாங்க வேண்டியது அவசியம்.

இதற்காக தமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில், 4,423 பேருக்கு முத்திரைத்தாள் விற்பனை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முத்திரைத்தாள் விற்பனைக்கான கமிஷனும் சேர்த்து தான், அவற்றின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் முத்திரைத் தாள்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன.

குறைந்தபட்சமாக, 20 மதிப்புள்ள முத்திரைத்தாள், 30 ரூபாய்; 100 ரூபாய் தாள், 130க்கும் விற்கப்படுகின்றன. இதே அடிப்படையில், அனைத்து முத்திரைத் தாள்களிலும், 30 முதல், 50 சதவீதம் வரை கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.சார் - பதிவாளர்கள் கூறியதாவது:தமிழகத்தில் பதிவுத்துறையில் உரிமம் பெற்றவர்கள், கூடுதல் விலைக்கு முத்திரைத்தாள் விற்றால், உரிமத்தை ரத்து செய்ய அந்தந்த மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் உள்ளது.

பல இடங்களில் புகார் அளிக்க மக்கள் தயங்குவதும், அப்படியே புகார் வந்தாலும், நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குவதும் தொடர்கிறது.இதுகுறித்து, பத்திரப் பதிவின் போது, பெரும்பாலான பொதுமக்கள் வாய்மொழியாக புகார் செய்கின்றனர். எழுத்துப்பூர்வ புகார் அளிக்க மக்கள் முன்வர வேண்டும்.கட்டுப்பாட்டு அறை வாயிலாக இத்தகைய புகார்களை பெற, பதிவுத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அப்போது தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X