பொது செய்தி

தமிழ்நாடு

புதிய 'கிரஷர் யூனிட்டு'கள் இயங்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது

Added : செப் 21, 2021
Share
Advertisement
சென்னை-தமிழகத்தில் கல் உடைக்கும் புதிய, 'கிரஷர் யூனிட்'கள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.ஒரு கிரஷர் யூனிட்டுக்கும், மற்றொரு யூனிட்டுக்கும் இடையில், 1 கி.மீ., துாரம் இருக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் விலக்கு அளித்தது. இதையடுத்து, புதிதாக கிரஷர் யூனிட் துவங்க அனுமதி கோரி, அரசுக்கு விண்ணப்பங்கள்

சென்னை-தமிழகத்தில் கல் உடைக்கும் புதிய, 'கிரஷர் யூனிட்'கள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

ஒரு கிரஷர் யூனிட்டுக்கும், மற்றொரு யூனிட்டுக்கும் இடையில், 1 கி.மீ., துாரம் இருக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் விலக்கு அளித்தது. இதையடுத்து, புதிதாக கிரஷர் யூனிட் துவங்க அனுமதி கோரி, அரசுக்கு விண்ணப்பங்கள் வந்தன. இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் விலக்கு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய கிரஷர் யூனிட்டுகள் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டது.இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, நிபுணர் கருத்தை பெறுவதாக தெரிவித்தார்.இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'கிரஷர் யூனிட்டுகளை திறப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன், நிபுணர் கருத்தை பெற வேண்டும். 'எனவே, ஏற்கனவே உள்ள தடை உத்தரவு, எந்த தளர்வும் இன்றி தொடரும்' என கூறியிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''இந்தப் பிரச்னை குறித்து, 'நீரி' எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

''ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க, ஆறு மாத அவகாசம் தேவை என நீரி தெரிவித்துள்ளது,'' என்றார்.கிரஷர் யூனிட்டுகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தடை உத்தரவால், யூனிட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன; குவாரி பணிகளுக்காக இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன' என்றார்.

இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:தற்போதைய நிலையில் இடைக்கால தடையை நீக்க முடியாது. விரிவான அறிக்கையை, ஆறு மாதங்களில் தாக்கல் செய்ய நீரி நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஆரம்பகட்ட அறிக்கையை, அக்டோபர் கடைசியில் நீரி தாக்கல் செய்ய வேண்டும்.மாசு கட்டுப்பாட்டு வாரிய பரிந்துரைக்கு ஆதரவாக, ஆரம்பகட்ட முகாந்திரம் இருந்தால், குவாரி பணிகளை துவங்க அனுமதிக்கலாம். எனவே, நீரி நிறுவனத்தின் அறிக்கை அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யலாம்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங் கிய எட்டு கல் குவாரிகளை மூடி விட்டதாகவும், நிபந்தனைகளை மீறி இருந்தால், அந்த கல் குவாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும், அரசு பிளீடர் முத்துக்குமார் தெரிவித்தார்.இதையடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இரண்டு வழக்குகளின் விசாரணையையும், டிச., 13க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X