பொது செய்தி

தமிழ்நாடு

நான் அவனில்லை: சதானந்த கவுடா மறுப்பு!

Added : செப் 21, 2021
Share
Advertisement
மங்களூரு-முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, 68, இடம் பெற்றதாக கூறப்படும், ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. எனினும், அந்த வீடியோவில் இருப்பது நானல்ல என அவர் கூறியுள்ளார்.இது குறித்து 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:என்னை பற்றி போலியான வீடியோ, சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். அதில் இருப்பது நானல்ல. எதிரிகள் என் கவுரவத்தை

மங்களூரு-முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, 68, இடம் பெற்றதாக கூறப்படும், ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. எனினும், அந்த வீடியோவில் இருப்பது நானல்ல என அவர் கூறியுள்ளார்.

இது குறித்து 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:என்னை பற்றி போலியான வீடியோ, சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். அதில் இருப்பது நானல்ல. எதிரிகள் என் கவுரவத்தை குலைப்பதற்காக, இது போன்ற போலியான வீடியோவை வெளியிட்டுஉள்ளனர். இது பற்றி சைபர் கிரைம் போலீசாரிடம், நான் புகார் அளித்துள்ளேன்

.''குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அந்த வீடியோவை பிறருக்கு அனுப்பவும், பதிவிறக்கம் செய்வதற்கும் நீதிமன்றத்திடம் தடை உத்தரவு பெற்றுள்ளேன்.இது போன்று செய்வோர், தண்டனைக்கு ஆளாவர். வீடியோவை பதிவேற்றம் செய்தது யார் செய்வது தெரிந்தால், தயவு செய்து என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X