கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வால் பாதிப்பு என்ன? நீதிபதி ராஜன் அறிக்கை வெளியீடு!

Updated : செப் 22, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தில், 'நீட்' தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அளித்த அறிக்கையை, நேற்று தமிழக அரசு வெளியிட்டது.'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்' என, தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். முதல்வரானதும், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், 'நீட்' தேர்வின்
 'நீட்' தேர்வால் பாதிப்பு என்ன? நீதிபதி ராஜன் அறிக்கை வெளியீடு!

சென்னை :தமிழகத்தில், 'நீட்' தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அளித்த அறிக்கையை, நேற்று தமிழக அரசு வெளியிட்டது.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்' என, தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். முதல்வரானதும், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்து ஜூன், 5ம் தேதி உத்தரவிட்டார்.

இக்குழு பல்வேறு ஆய்வுகளை நடத்திய நிலையில், ஜூலை மாதம் முதல்வரை சந்தித்து 165 பக்க அறிக்கையை அளித்தது. அதன் அடிப்படையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அளித்த 165 பக்க அறிக்கையை அரசு வெளியிட்டது.

அந்த அறிக்கையில், 'நீட் ரத்து சட்டம், மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையில், பிளஸ் 2 வகுப்பில் எத்தனை மாணவர்கள், அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளில், மத்திய பாடத் திட்ட பள்ளிகளில் படிக்கின்றனர்; அவர்களில் ஒவ்வொரு ஆண்டும், எத்தனை பேர் மருத்துவ கல்லுாரிகளில் சேருகின்றனர் என்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
'நீட்' தேர்வுக்கு முன்பாக, மருத்துவ கல்லுாரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை, இரட்டை இலக்கத்தில் இருந்துள்ளது.
நீட் வந்த பின், ஒற்றை இலக்கத்திற்கு மாறியுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய பின், அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை, மூன்று இலக்கத்தை எட்டியுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
21-செப்-202121:25:29 IST Report Abuse
vbs manian ராஜன் அவர்களே பிச்சு கட்டியிருக்கிறீர்கள். இந்த அறிவு பூர்வமான அணுகுமுறை தமிழ்நாட்டு சா கிரட்டீசுகளுக்கு புரியாது. பிடிக்காது. அவர்களால் செய்ய முடிவது உணர்ச்சி பூர்வமான அரசியல் செய்து மக்களை உசுப்பி விட்டு ஆட்சியை பிடிப்பது பத்து தலை முறைக்கு காசு பார்ப்பது. இன்றைய இளைய தலைமுறை விழித்து கொள்ளவேண்டும். இல்லையேல் அவர் கள் கட்சி கோடி ஏந்தி மிரட்டி கட்ட பஞ்சாயத்து செய்துதான் வாழ முடியும்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
21-செப்-202120:59:43 IST Report Abuse
a natanasabapathy நீதிபதியின் கருத்து வருந்த தக்கது தரமான மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது தகுதி இல்லாதவர்களை மருத்துவ படிப்பில் சேர்க்கும் பொது படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வார்கள் அதிகரித்து வருகின்றனர்
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
21-செப்-202117:13:18 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan குப்பைத் தொட்டிக்கு போக வேண்டிய அறிக்கை. சமச்சீர் கல்வியில் படித்தால் முட்டள்களாகலாம். அவர்களை மருத்துவராக்க உதவும் உபயோகமற்ற அறிக்கை.. திமுக கொடுத்த தலைப்பில் எழுதப் பட்ட கட்டுரை அறிக்கைய்க்கப் பட்டுள்ளது . அவ்வளவுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X