பொது செய்தி

தமிழ்நாடு

'எக்ஸ் கிளாஸ்' இன்ஜின் 2வது கட்ட சோதனை ஓட்டம்

Added : செப் 21, 2021
Share
Advertisement
குன்னுார்---நம் நாட்டில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜினின், இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் நடந்தது.நீலகிரி மாவட்டம், குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையே நுாற்றாண்டுகளாக, நிலக்கரி நீராவி இன்ஜின் வாயிலாக மலை ரயில் இயக்கப்பட்டது. தற்போது, 'பர்னஸ்' ஆயிலில் இயங்கும் நீராவி இன்ஜின்களும், ஊட்டி - குன்னுார் இடையே டீசல் இன்ஜின்களும்
 'எக்ஸ் கிளாஸ்' இன்ஜின் 2வது கட்ட சோதனை ஓட்டம்

குன்னுார்---நம் நாட்டில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜினின், இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் நடந்தது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையே நுாற்றாண்டுகளாக, நிலக்கரி நீராவி இன்ஜின் வாயிலாக மலை ரயில் இயக்கப்பட்டது. தற்போது, 'பர்னஸ்' ஆயிலில் இயங்கும் நீராவி இன்ஜின்களும், ஊட்டி - குன்னுார் இடையே டீசல் இன்ஜின்களும் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, நம் நாட்டிலேயே முதல்முறையாக, 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜின், 8.9 கோடி ரூபாய் மதிப்பில், திருச்சி பொன்மலை ரயில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.

கடந்த 9ம் தேதி முதற்கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.நேற்று இரண்டாம் கட்ட சோதனை ஓட்டத்தை முன்னிட்டு, ஒரு பெட்டியுடன் குன்னுாரில் இருந்து, மேட்டுப்பாளையம் வரையிலான மலை பாதையில் இயக்கப்பட்டது. இன்று காலை மேட்டுப் பாளையத்தில் இருந்து மூன்று பெட்டிகளுடன், மீண்டும் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. பல் சக்கரத்தில் இயங்குவது; பாலத்தின் மீது செல்வது உட்பட தொழிற்நுட்ப பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில், இந்த புதிய இன்ஜின் வாயிலாக மலை பாதையில் சுற்றுலா பயணி யர் செல்ல, ரயில்வே நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X