பொது செய்தி

தமிழ்நாடு

உரங்கள் வாங்க நிர்பந்தம் விவசாயிகள் குற்றச்சாட்டு

Added : செப் 21, 2021
Share
Advertisement
'பயிர்க்கடன் வாங்கும் போது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில், மொத்த உரங்களையும் ஒரே தவணையாக வாங்க நிர்பந்திக்கின்றனர்' என, விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஒவ்வொரு பயிர் - பசலி ஆண்டிலும் விவசாயிகளுக்கு தமிழக அரசால் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. 2021-2022 ஆண்டிற்கு வாழைக்கு ஏக்கருக்கு 65 ஆயிரம் ரூபாய், நெல்லுக்கு ஏக்கருக்கு 32 ஆயிரம் ரூபாய், பயிர்க்கடன்

'பயிர்க்கடன் வாங்கும் போது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில், மொத்த உரங்களையும் ஒரே தவணையாக வாங்க நிர்பந்திக்கின்றனர்' என, விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒவ்வொரு பயிர் - பசலி ஆண்டிலும் விவசாயிகளுக்கு தமிழக அரசால் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. 2021-2022 ஆண்டிற்கு வாழைக்கு ஏக்கருக்கு 65 ஆயிரம் ரூபாய், நெல்லுக்கு ஏக்கருக்கு 32 ஆயிரம் ரூபாய், பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.பயிர் கடன்இவ்வாறு 1 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் வழங்கினால் 11 ஆயிரம் ரூபாய்க்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் மொத்தமாக ஒரே தவணையில் உரங்கள் வாங்க வேண்டும் என விவசாயிகளிடம் வங்கி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நெல்லுக்கும், வாழைக்கும் ஒரே தவணையில் உரங்களை இட முடியாது. குறைந்தபட்சம் மூன்று தவணைகளாவது உரம் இட வேண்டும். மொத்தமாக உரங்களை வாங்கினால் ஒரு தவணையில் இட்டது போக மீதமுள்ள உரங்களை விவசாயிகள் பாதுகாப்பது கடினம்.முன்னோடி விவசாயிகள் கூறியதாவது: மழைக்காலமாக இருப்பதால் உரங்கள் கசிவு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. வங்கிகளில் உரங்களை சேமிக்க இடவசதி உள்ளது. விவசாயிகளால் இயலாது.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் தேவையான உரங்கள் கிடைப்பது சிரமமாகஉள்ளது. சல்பேட் உரம் இல்லைசில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் சல்பேட் உரம் இல்லை. விவசாயி விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இருக்கும் உரத்தை வாங்கும் கட்டாயச் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அரசு நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு தேவையான உரங்களை மூன்று தவணைகளாக வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X