பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய தொடர் இயக்கம்

Added : செப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை-முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் இயக்கம் நடந்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முடிவு செய்து உள்ளது.மதுரையில் நேற்று மாநில பொது செயலர் சுருளிராஜ் கூறியதாவது:கடந்த 2003 முதல் அரசு பணியில் இணைந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தை திரும்ப பெற்று

மதுரை-முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் இயக்கம் நடந்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முடிவு செய்து உள்ளது.

மதுரையில் நேற்று மாநில பொது செயலர் சுருளிராஜ் கூறியதாவது:கடந்த 2003 முதல் அரசு பணியில் இணைந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தை திரும்ப பெற்று பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 18 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கண்டுகொள்ளப்படாதது வேதனையளிக்கிறது.சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய திட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் சட்டசபை கூட்டத்தொடரில் இதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

அதுமட்டுமின்றி அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் தொடர்பாக அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் வேதனையளிக்கிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் இயக்கங்கள் நடந்த சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த மத்திய செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுஉள்ளது. முதல்வர் ஸ்டாலின் உடனடியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-செப்-202105:21:03 IST Report Abuse
Bhaskaran கண்டிப்பாக நிறைவேற்றமாட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X