அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி தேர்தல் எப்போது? அமைச்சர் நேரு தகவல்!

Added : செப் 21, 2021
Share
Advertisement
சேலம்-'' வார்டு மறுவரையறை செய்யும் பணி நிறைவு பெற்றதும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.சேலத்தில் நேற்று அவர் கூறியதாவது:தமிழகத்தில் மழைநீர் வடிகால் மற்றும் ஏரி, குளங்கள் துார்வாரும் பணி துவங்கபட்டுள்ளது. தொடர்ந்து, 10 நாட்கள் பணி நடைபெறும். சென்னையில் நடப்பாண்டு, 200 குளங்கள் துார்வாரி மழை நீர் சேகரிக்க,
 மாநகராட்சி தேர்தல் எப்போது? அமைச்சர் நேரு தகவல்!

சேலம்-'' வார்டு மறுவரையறை செய்யும் பணி நிறைவு பெற்றதும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.

சேலத்தில் நேற்று அவர் கூறியதாவது:தமிழகத்தில் மழைநீர் வடிகால் மற்றும் ஏரி, குளங்கள் துார்வாரும் பணி துவங்கபட்டுள்ளது. தொடர்ந்து, 10 நாட்கள் பணி நடைபெறும். சென்னையில் நடப்பாண்டு, 200 குளங்கள் துார்வாரி மழை நீர் சேகரிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பகிங்ஹாம் கால்வாய், அடையாறு, கூவம் ஆகிய இடங்களில் துார்வாரும் பணி நடக்கிறது. பாதாள சாக்கடை திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் ஆறு மாநகராட்சிகள்; 29 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு வாக்காளர்களின் எண்ணிக்கையை சீரமைக்க, வார்டு மறுவரையறை செய்யும் பணி நடந்து வருகிறது. அப்பணி நிறைவு பெற்றதும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். மூன்று லட்சத்துக்கும் அதிகமான, மக்கள் தொகை கொண்ட மாநகராட்சியில் வார்டு எண்ணிக்கை, 58 ஆகவும், ஐந்து லட்சம் பேருக்கு மேல் இருந்தால், வார்டு எண்ணிக்கை 80 ஆகவும் உயர்த்தப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X