சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி: 3 பேர் கைது

Added : செப் 21, 2021
Share
Advertisement
அரக்கோணம்-அரக்கோணம் அருகே, ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் சுற்றிக் கொண்டிருந்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுஇருந்தனர். அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் யார்டு அருகே, எட்டு பேர் சுற்றிக் கொண்டிருந்தனர். போலீசார் மூவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள்

அரக்கோணம்-அரக்கோணம் அருகே, ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் சுற்றிக் கொண்டிருந்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுஇருந்தனர். அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் யார்டு அருகே, எட்டு பேர் சுற்றிக் கொண்டிருந்தனர். போலீசார் மூவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் சென்னை தாம்பரத்தை சேர்ந்த பூபதி, 24, பெங்களூரு அல்சூரை சேர்ந்த தேஜேஸ்வரன், 25, அரக்கோணத்தை சேர்ந்த பிரகாஷ், 22, என்பதும் தெரிந்தது. இவர்கள் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் சென்றது தெரிந்தது.போலீசார் மூன்று பேரை கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ஐந்து பேரை தேடி வருகின்றனர்.அரக்கோணம் அருகே பெருங்களத்துாரில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் உள்ள இயந்திரத்தை கடந்த, 17ம் தேதி மர்ம நபர்கள் உடைத்து 3.90 லட்சம் ரூபாயை கொள்ளைஅடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X