சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கன்றுக்குட்டி, எருமை மாடுகளுக்கு மாட்டுத்தாவணியில் 'வெட்டு'

Added : செப் 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை-மதுரை மாட்டுத்தாவணி யில் கரும்பு தின்ற கன்றுக்குட்டிகள் உட்பட எருமை மாடுகளை ஒருமாதமாக அரிவாளால் வெட்டி விரட்டியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை மாட்டுத்தாவணி யில் உள்ள காய்கறி மார்க்கெட் அருகே கரும்புகளை குவித்து ஜூஸ் வியாபாரிகளுக்கு சிலர் விற்று வருகின்றனர். கரும்புகளை பாதுகாக்க வாட்ச்மேன் மாரி என்பவரை நியமித்துள்ளனர். புதுார்
 கன்றுக்குட்டி, எருமை மாடுகளுக்கு மாட்டுத்தாவணியில் 'வெட்டு'

மதுரை-மதுரை மாட்டுத்தாவணி யில் கரும்பு தின்ற கன்றுக்குட்டிகள் உட்பட எருமை மாடுகளை ஒருமாதமாக அரிவாளால் வெட்டி விரட்டியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாட்டுத்தாவணி யில் உள்ள காய்கறி மார்க்கெட் அருகே கரும்புகளை குவித்து ஜூஸ் வியாபாரிகளுக்கு சிலர் விற்று வருகின்றனர். கரும்புகளை பாதுகாக்க வாட்ச்மேன் மாரி என்பவரை நியமித்துள்ளனர். புதுார் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட எருமை மாடுகள், வண்டியூர் கண்மாய் கரை பகுதியில் மேய்ந்துவிட்டு மாலை வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.ஒருமாதத்திற்கு முன் சில மாடுகளின் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்தன. போதையில் யாராவது செய்திருக்கலாம் எனக்கருதி உரிமையாளர்கள் சிகிச்சை அளித்தனர். இருநாட்களுக்கு முன் கன்றுக்குட்டிகள் உட்பட சில மாடுகளின் உடலில் வெட்டுக்காயம் இருந்தது. சந்தேகப்பட்ட மாட்டு உரிமையாளர் சகாயராஜ் தரப்பினர், நேற்று மாடுகளை மேயவிட்டு கண்காணித்தனர். அவை கரும்புகள் குவித்து வைத்துள்ள இடத்திற்கு சென்று சாப்பிட்டன. அப்போது அங்கிருந்த வாட்ச்மேன் மாரி விரட்ட அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதில் காயமடைந்த மாரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.மாடுகளை வெட்டியதாக சகாயராஜூம், விலங்குகள் நல ஆர்வலர்களும் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். விசாரணை நடக்கிறது.மாடுகளுக்கு கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் வைரவசாமி தலைமையிலான குழு சிகிச்சை அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-செப்-202113:40:24 IST Report Abuse
jayvee சகாயராஜ் மாட்டை ஏன் பொது வெளியில் மேய விட்டார்.. விலங்குகள் நல சங்கம் இதை விசாரிக்குமா ?
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
21-செப்-202116:33:17 IST Report Abuse
R S BALA எது எப்படியோ யார் பக்கம் நியாயம் இருக்கோ .. அதெல்லாம் அடுத்த விஷயம் ..வாயில்லா ஜீவனை ஏன்டா வதைக்கிறிங்க..
Rate this:
Cancel
21-செப்-202111:26:27 IST Report Abuse
அப்புசாமி மாடுகளை பாலைக் கறந்து கொண்டு, தீனி போடாம தெருவில் மேய விடும் உரிமையாளர்களை உதைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X