தமிழ்நாடு

ரிசர்வ் சைட்டுகள் 'ஏப்பம்'தான்: கொஞ்சம் அசந்தால் போதும்! நேற்று ரூ.6 கோடி நிலம் மீட்பு:

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சிக்கு சொந்தமான, ரூ.6 கோடி மதிப்புள்ள, 39 சென்ட் 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது. போலி வரைபடம் தயாரித்து விற்க முயற்சித்தது தெரியவந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீட்டனர்.மாநகராட்சியுடன் விளாங் குறிச்சி இணைவதற்கு முன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கு கீழ் இருந்தது. 1990ல், 3.50 ஏக்கருக்கு ஸ்ரீராமகிருஷ்ணா லே-அவுட் உருவாக்கி, 34
ரிசர்வ் சைட்டுகள் 'ஏப்பம்'தான்: கொஞ்சம் அசந்தால் போதும்! நேற்று ரூ.6 கோடி நிலம் மீட்பு:

கோவை:கோவை மாநகராட்சிக்கு சொந்தமான, ரூ.6 கோடி மதிப்புள்ள, 39 சென்ட் 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது. போலி வரைபடம் தயாரித்து விற்க முயற்சித்தது தெரியவந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீட்டனர்.மாநகராட்சியுடன் விளாங் குறிச்சி இணைவதற்கு முன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கு கீழ் இருந்தது. 1990ல், 3.50 ஏக்கருக்கு ஸ்ரீராமகிருஷ்ணா லே-அவுட் உருவாக்கி, 34 மனைகளுக்கு உள்ளூர் திட்ட குழுமத்திடம் வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதில், 33 மனைகள் ஒதுக்கப்பட்டன. பூங்காவுக்கு, 15,840 சதுரடி, பக்க திறவிடமாக, 1,440 சதுரடி ஒதுக்கப்பட்டது.இதில், 12 மனைகள் லே-அவுட் உரிமையாளரால் நேரடியாகவும், 21 மனைகள் 'பவர் ஏஜன்ட்' மூலமாகவும் கிரையம் செய்யப்பட்டுள்ளன.2018ல், பூங்கா, பக்க திறவிடத்துக்கு ஒதுக்கிய நிலங்களையும், அருகாமையில் உள்ள இடத்தையும் சேர்த்து, போலியாக வரைபடம் தயாரித்துள்ளனர். அதை அங்கீகாரமற்ற மனைப்பிரிவாக காட்டி, வரன்முறை செய்திருக்கின்றனர்.

இது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.உடனே, போலியாக வரைபடம் தயாரித்து, மாநகராட்சிக்கு சொந்தமான, ரூ.6 கோடி மதிப்பிலான, 39 சென்ட் நிலத்தை, 8 மனைகளாக பிரித்து, விற்பதற்கு நடந்த முயற்சி தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன், உள்ளூர் திட்ட குழுமம் வழங்கிய வரைபட அனுமதி தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தார். மாநகராட்சிக்கு சொந்தமான சொத்து என்பது தெரியவந்ததை தொடர்ந்து, அப்பகுதியில், 'மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடம்' என, அறிவிப்பு பலகையை வைத்தார்.

போர்டு போதாது!சில நாட்களுக்கு முன், 18வது வார்டு, அலமேலு மங்கை நகரில், பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கிய, 10 சென்ட் இடத்தில், 7 கடைகள் கட்டப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டிருந்தது தெரியவந்தது. மாநகராட்சி அதிகாரிகள் வணிக வளாகத்தின் முன், எச்சரிக்கை போர்டு மட்டும் வைத்து விட்டு வந்தனர். தொடர் நடவடிக்கை, கண்காணிப்பு இல்லாததால், அந்த போர்டை ஆக்கிரமிப்பாளர்கள் கழற்றி வீசி விட்டனர். மாநகராட்சிக்கு சொந்தமான இடம், இன்னமும் ஆக்கிரமிப்பாளர் வசம் இருக்கிறது. 'ரிசர்வ் சைட்' மீட்க தனிக்குழு ஏற்படுத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X