நீதிமன்றம் மீது இருந்த நம்பிக்கை இழந்துவிட்டேன்: கங்கணா ரணாவத்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை-பாடலாசிரியர் தொடர்ந்த அவதுாறு வழக்கை விசாரித்து வரும் மும்பை நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான நடிகை கங்கணா ரணாவத், நீதிமன்றம் மீது இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக தெரிவித்தார்.மஹாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத், ஹிந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜவேத் அக்தர் குறித்து வெளியிட்ட கருத்து

மும்பை-பாடலாசிரியர் தொடர்ந்த அவதுாறு வழக்கை விசாரித்து வரும் மும்பை நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான நடிகை கங்கணா ரணாவத், நீதிமன்றம் மீது இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக தெரிவித்தார்.



latest tamil news



மஹாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத், ஹிந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜவேத் அக்தர் குறித்து வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கங்கணாவுக்கு எதிராக ஜாவேத் அக்தர் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஆர்.ஆர். கான், கங்கணாவை நேரில் ஆஜராகக் கோரி, 'சம்மன்'அனுப்பினார். எனினும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கங்கணா தொடர்ந்து விலக்கு கேட்டு வந்தார்.

கடந்த வாரம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்து. அப்போது தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறி, ஆஜராவதில் இருந்து அவர் மீண்டும் விலக்கு கேட்டார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, 'அடுத்த விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கங்கணாவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும்' என, எச்சரித்தார்.இந்நிலையில், நேற்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கங்கணா நேரில் ஆஜரானார்.


latest tamil news


அப்போது கங்கணா தரப்பு வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் கூறியதாவது:இந்த நீதிமன்றத்தின் மீது இருந்த நம்பிக்கையை கங்கணா ரணாவத் இழந்துவிட்டார். எனவே இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரும் மனு, தலைமை மாஜிஸ்திரேட் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதை ஜாவேத் அக்தரின் வழக்கறிஞர் ஏற்க மறுத்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை, நவ., 15க்கு ஒத்திவைக்கப் பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
25-செப்-202114:01:32 IST Report Abuse
Milirvan கங்கணாவுக்கு எதிராக ஜாவேத் அக்தர்...நீதிபதி ஆர்.ஆர். கான்.. ஹி..ஹி..
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
23-செப்-202114:17:53 IST Report Abuse
jayvee இது ஒன்றும் புதிதல்ல.. பல நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் இப்படிப்பட்ட கோரிக்கைகளை இன்றளவும் முன்வைத்து வருகிறார்கள்.. நீதிபதிகள் தாங்களாகவே முன் வந்து காரணம் சொல்லாமல் வழக்குகளிருந்து விலகும் போது, பொது ஜனங்களும் வக்கீல்களும் அப்படிப்பட்ட கோரிக்கைகளை முன்வைப்பது அவர்களின் உரிமை ..
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
21-செப்-202115:32:07 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் " இதே மாதிரி எவனாவது பொதுஜனம் சொன்னா தெரியும் சேதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X