பொது செய்தி

தமிழ்நாடு

இலவச தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Added : செப் 21, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெ.நா.பாளையத்தில், தேசிய மனித மேம்பாட்டு மையம் சார்பில், இலவச தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது.பெரியநாயக்கன்பாளையத்தில், குப்பிச்சிபாளையம் ரோடு, பெருமாள் கோவில் அருகில், தேசிய மனித மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது.இதுதொடர்பாக, பயிற்சி மைய இயக்குனர் சகாதேவன்,

பெ.நா.பாளையம்:பெ.நா.பாளையத்தில், தேசிய மனித மேம்பாட்டு மையம் சார்பில், இலவச தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது.பெரியநாயக்கன்பாளையத்தில், குப்பிச்சிபாளையம் ரோடு, பெருமாள் கோவில் அருகில், தேசிய மனித மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது.இதுதொடர்பாக, பயிற்சி மைய இயக்குனர் சகாதேவன், கூறியதாவது:சுயதொழில் செய்ய விரும்புவோர், படிப்பை தொடர இயலாதவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில், தையல் பயிற்சி, கைவினை பொருள்கள் தயாரித்தல், எம்பிராய்டரிங், வீட்டு ஒயரிங் மற்றும் பிளம்பிங் ஆகிய பயிற்சிகள், ஒரு வாரம் முதல், நான்கு மாதம் வரை இலவசமாக வழங்கப்படுகின்றன.சிறந்த வல்லுனர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரடியாக பணியில் ஈடுபட செய்து, செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழுடன், வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்து தரப்படும்.சுய தொழில் செய்ய விரும்புவோருக்கு, வங்கி கடன் பெற ஆலோசனை வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர், கல்வி சான்றிதழ் நகல், ஆதார் கார்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் வரும் 24ம் தேதி நேரில் வரவும். மேலும், தகவல்களுக்கு, 8122322381 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X