பொது செய்தி

தமிழ்நாடு

பந்தல் காய்கறி வளர்ப்புக்கு மானியம்: தோட்டக்கலைத்துறை அழைப்பு

Added : செப் 21, 2021
Share
Advertisement
சூலுார்:நிரந்தர பந்தல் காய்கறி வளர்ப்பு திட்டத்துக்கு, தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி வெளியிட்டுள்ள அறிக்கை:தோட்டக்கலைத்துறை சார்பில், நிரந்தர பந்தல் காய்கறி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.சூலுார் வட்டாரத்தில், 100 எக்டரில் பந்தல் காய்கறி சாகுபடி நடக்கிறது. புடலங்காய்,

சூலுார்:நிரந்தர பந்தல் காய்கறி வளர்ப்பு திட்டத்துக்கு, தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி வெளியிட்டுள்ள அறிக்கை:தோட்டக்கலைத்துறை சார்பில், நிரந்தர பந்தல் காய்கறி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.சூலுார் வட்டாரத்தில், 100 எக்டரில் பந்தல் காய்கறி சாகுபடி நடக்கிறது. புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய் உள்ளிட்டவைகள் பயிரிடப்படுகின்றன.பந்தல் காய்கறி சாகுபடியில், புதிதாக இணையும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத்துறை மூலம் ஒரு எக்டருக்கு, ரூ. 2 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், கல் கால்கள் மற்றும் கம்பிகள் மூலம் பந்தல் அமைக்கப்பட உள்ளதால், ஒரு முறை முதலீடு செய்தால் போதும். அது நிரந்தர பலனை தரும்.திட்டத்தில் பயன்பெற, சிட்டா அடங்கல், ஆதார் நகல், புல வரைபடம், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், சூலுார் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X