பஞ்சாபின் முதல் தலித் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்பு| Dinamalar

பஞ்சாபின் முதல் தலித் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்பு

Added : செப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி-பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நேற்று பதவியேற்றார். மாநிலத்தின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பை இவர் பெறுகிறார். இவருடன், காங்., மூத்த தலைவர்கள் சுக்ஜிந்தர் சிங் ரன்தாவா மற்றும் ஓம் பிரகாஷ் சோனி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சரும், முன்னாள்
 பஞ்சாபின் முதல் தலித் முதல்வராக  சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்பு

புதுடில்லி-பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நேற்று பதவியேற்றார். மாநிலத்தின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பை இவர் பெறுகிறார். இவருடன், காங்., மூத்த தலைவர்கள் சுக்ஜிந்தர் சிங் ரன்தாவா மற்றும் ஓம் பிரகாஷ் சோனி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் நிலவி வந்தது.ராஜினாமாஅடுத்த ஆண்டு துவக்கத்தில் பஞ்சாப் சட்டசபை தேர்தல் நடப்பதை அடுத்து மோதலை முடிவுக்கு கொண்டு வர காங்., மேலிடம் முயற்சித்தது.நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் காங்., தலைவராக நியமிக்கப்பட்டார். முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர். இது தொடர்பான எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மாநில தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சரண்ஜித் சிங் சன்னி, 58, புதிய முதல்வராக நேற்று முன் தினம் நியமிக்கப்பட்டார்.இவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இவருடன், மூத்த காங்., தலைவர்கள் சுக்ஜிந்தர் சிங் ரன்தாவா மற்றும் ஓம் பிரகாஷ் சோனி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். பதவி ஏற்பு விழாவில் காங்., - எம்.பி., ராகுல், நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புதிதாக பதவியேற்றுள்ள அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். 'பஞ்சாப் மாநிலத்துக்கு மத்திய அரசு அளித்து வரும் ஆதரவு தொடரும்' என, பிரதமர் குறிப்பிட்டு உள்ளார்.கூட்டணி தேர்தல்பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக பஞ்சாப் காங்., முன்னாள் தலைவரும், புதிய முதல்வர் பொறுப்புக்கு பரிசீலிக்கப்பட்டவருமான சுனில் ஜக்கார், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:பஞ்சாப் சட்டசபை தேர்தலை சித்துவின் தலைமையின் கீழ் காங்., எதிர்கொள்ளும் என, மாநில பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ள கருத்து குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள முதல்வரை குறைத்து மதிப்பிடுவதைப் போலவும், தலைமையின் தேர்வை உதாசீனப்படுத்துவதை போலவும் உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய முதல்வர் பொறுப்பேற்றாலும், பஞ்சாபின் உட்கட்சி குழப்பம் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பதையே இது தெளிவுபடுத்துவதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு மிக நெருக்கமானவராக அறியப்படுபவர். தலித் சமூகத்தை சேர்ந்த இவர், பஞ்சாபின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பை பெறுகிறார்.பஞ்சாபில் 31 சதவீதம் தலித் சமூகத்தினர் வசிக்கின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன், அகாலி தளம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.முட்டாள்கள் இல்லைஎனவே தலித் ஓட்டுக்களை பெறுவதற்காகவே சரண்ஜித் சிங்குக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது:பஞ்சாப் சட்டசபை தேர்தலை தலித் அல்லாத ஒருவரின் தலைமையின் கீழ் காங்., எதிர்கொள்ள இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். தலித்கள் மீது காங்கிரசுக்கு இன்னும் முழு நம்பிக்கை ஏற்படவில்லை என்பதையே இது உணர்த்துகிறது. தேவை ஏற்படும் போது மட்டுமே தலித் மக்களை காங்., நினைவில் கொள்ளும். இது போன்ற தந்திரங்களை நம்ப பஞ்சாப் மக்கள் முட்டாள்கள் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.காங்., தலைவர் சோனியா, ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் உள்ளார். அவர், அமரீந்தர் சிங்கை சந்தித்து சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.குரல் தழுதழுக்கநன்றி சொன்ன முதல்வர்முதல்வராக பதவியேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த சரண்ஜித் சிங் கூறியதாவது:என்னைப் போன்ற சாமானியனுக்கு மிக உயரிய பதவியை அளித்த கட்சி மேலிடத்துக்கு நன்றி.

நான் ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், சாமானியர்களின் பிரதிநிதி. பணக்காரர்களுக்கான பிரதிநிதி அல்ல. மணல் கொள்ளையர்களும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களும் என்னை அணுக வேண்டாம். உங்களுக்காக எதுவும் செய்ய மாட்டேன்.இது விவசாயிகளுக்கான அரசு. எனவே மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்த அரசு தொடர்ந்து குரல் கொடுக்கும். அமரீந்தர் சிங் சிறப்பாக பணியாற்றிச் சென்றுள்ளார். அவர் விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்து முடிப்பேன். கட்சி தலைமையே முதன்மையானது. கட்சி தலைமை எடுக்கும் முடிவுகளை இந்த அரசு நிறைவேற்றும்.இவ்வாறு அவர் கூறினார்.நான் சாமானியன் என கூறும் போது முதல்வர் சரண்ஜித் சிங்கின் குரல் தழுதழுத்து, உணர்ச்சி வசப்பட்டவராக பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X