அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ரயில்கள் மீண்டும் இயக்கப்படும்!' பொள்ளாச்சி எம்.எல்.ஏ., நம்பிக்கை

Added : செப் 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:'கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளன,' என பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் தெரிவித்தார்.பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் அறிக்கை:பொள்ளாச்சி - போத்தனுார் இடையே, கடந்த, 2017ம் ஆண்டு அக்., மாதம், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்களுக்காக, காலை மற்றும் மாலையில் ரயில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. 2018ம் ஆண்டு ஜன., 11ம் தேதி முதல், கோவை

பொள்ளாச்சி:'கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளன,' என பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் தெரிவித்தார்.பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் அறிக்கை:பொள்ளாச்சி - போத்தனுார் இடையே, கடந்த, 2017ம் ஆண்டு அக்., மாதம், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்களுக்காக, காலை மற்றும் மாலையில் ரயில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. 2018ம் ஆண்டு ஜன., 11ம் தேதி முதல், கோவை - மதுரை, கோவை - பொள்ளாச்சி இடையே பயணிகள் ரயில் இயக்க முதன்மை இயக்க மேலாளரிடம் நேரடியாக கடிதம் கொடுக்கப்பட்டது. கடந்த, 2018 ஜன., 15ம் தேதி முதல் ரயில் இயக்கப்பட்டது.மத்திய அமைச்சரிடம், கோவை - போத்தனுார் இடையே மின்மயமாக்கல் பணி மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தேன். அதன்பின், பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினேன்.கடந்த மாதம் மின் மயமாக்கல் பணிகள் முடிந்துள்ளதால், கோவை - பொள்ளாச்சி, கோவை - மதுரை ரயில்கள் இயக்க பொது மேலாளருக்கு கோரிக்கை விடுத்தேன்.தற்போது, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர், மின்வழித்தட பாதுகாப்பு குறித்து சோதனை மேற்கொண்டுள்ளார்.எனவே, கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட கோவை - பொள்ளாச்சி, கோவை - மதுரை பயணியர் ரயில்கள், புதிய மின்வழித்தடங்களில் விரைவில் இயக்கப்பட உள்ளன. அதே போல ஏற்கனவே வைத்த கோரிக்கையின் படி, பொள்ளாச்சி வழியாக கோவை - காரைக்கால், கோவை - ராமேஸ்வரம் ரயில்கள் இயக்கப்படும் என நம்பிக்கை பிறந்துள்ளது.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X