பொது செய்தி

இந்தியா

பேஸ்புக் பொதுக் கொள்கைப் பிரிவு இயக்குனராக ராஜிவ் அகர்வால் நியமனம்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021
Share
Advertisement
புதுடில்லி-'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் பொதுக் கொள்கைப் பிரிவு இயக்குனராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.பேஸ்புக் பொதுக் கொள்கை பிரிவு இயக்குனராக இருந்த அன்கி தாஸ், இடதுசாரி தலைவர்களின் வெறுப்புணர்வு பதிவுகள் தொடர்பான சர்ச்சையில் சிக்கி கடந்த ஆண்டு பதவி விலகினார்.இந்நிலையில் பேஸ்புக் இந்தியா வெளியிட்டுள்ள

புதுடில்லி-'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் பொதுக் கொள்கைப் பிரிவு இயக்குனராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.



latest tamil news



பேஸ்புக் பொதுக் கொள்கை பிரிவு இயக்குனராக இருந்த அன்கி தாஸ், இடதுசாரி தலைவர்களின் வெறுப்புணர்வு பதிவுகள் தொடர்பான சர்ச்சையில் சிக்கி கடந்த ஆண்டு பதவி விலகினார்.இந்நிலையில் பேஸ்புக் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை:பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் பொதுக் கொள்கைப் பிரிவு இயக்குனராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


இவர், ஊபர் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பொதுக் கொள்கை பிரிவின் செயல் தலைவராக பணியாற்றியவர். உ.பி.,யின் ஒன்பது மாவட்டங்களில் கலெக்டராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். இவர், தொழில் வளர்ச்சி துறையின் இணை செயலராக இருந்தபோது, இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை கொள்கையை உருவாக்க துணை புரிந்தவர். நாடு முழுவதும் உள்ள சொத்துரிமை கொள்கை அலுவலகங்களை 'டிஜிட்டல்' மயமாக்கியவர். இந்தியா - அமெரிக்கா வர்த்தக கூட்டமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர். ராஜிவ் அகர்வாலின் நியமனம், இந்திய மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான இணைய பயன்பாட்டை வழங்க உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X