பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், தடுப்பூசி குறித்து ஐ.நா.,வில் விவாதிக்க இந்தியா திட்டம்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ஐ.நா., பொதுச் சபையில் பயங்கர வாதம், பருவ நிலை மாற்றம், தடுப்பூசி வினியோகம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும்படி வலியுறுத்த, இந்தியா திட்டமிட்டுள்ளது.கடந்த ஒரு வாரமாக ஐ.நா., பொதுச் சபையின் 76வது கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் இன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி 25ம் தேதி உரையாற்ற உள்ளார். இது

புதுடில்லி: ஐ.நா., பொதுச் சபையில் பயங்கர வாதம், பருவ நிலை மாற்றம், தடுப்பூசி வினியோகம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும்படி வலியுறுத்த, இந்தியா திட்டமிட்டுள்ளது.



latest tamil news


கடந்த ஒரு வாரமாக ஐ.நா., பொதுச் சபையின் 76வது கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் இன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி 25ம் தேதி உரையாற்ற உள்ளார். இது குறித்து ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி கூறியதாவது:இந்தியாவுக்கு தற்போதைய ஐ.நா.,பொதுச் சபை கூட்டம் பல வகையில் முக்கியமானது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக உள்ள இந்தியா, வளரும் நாடுகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதில் முதலிடம் வகிக்கிறது.


latest tamil news


எனவே இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு உலக நாடுகள் இடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது. பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்வது, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க இந்தியா வலியுறுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் சுயாதிகாரம், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, உலக நாடுகளின் பொருளாதார மீட்சி, ஸ்திரமான வளர்ச்சிக்கான இலக்கு ஆகியவை குறித்தும் விவாதிக்கும்படி இந்தியா வலியுறுத்தும். விவாதத்தை தடுக்க அல்லது நிறுத்தும் முயற்சிகளை உறுப்பு நாடுகளின் ஆதரவுடன், இந்தியா முறியடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-செப்-202114:18:18 IST Report Abuse
jayvee time waste
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X