அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கூட்டணி கட்சிகள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு கண்டனம்

Added : செப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், நேற்று, கறுப்பு கொடியுடன், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சியில் தி.மு.க., சார்பில், மகாலிங்கபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க, மாநில
 தி.மு.க., கூட்டணி கட்சிகள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு கண்டனம்

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், நேற்று, கறுப்பு கொடியுடன், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியில் தி.மு.க., சார்பில், மகாலிங்கபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க, மாநில விவசாய அணி தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார்.காங்., கமிட்டி மனித உரிமை கழக தலைவர் பஞ்சலிங்கம் முன்னிலை வகித்தனர். கறுப்பு சட்டை அணிந்து, கறுப்பு கொடியுடன் கோஷங்கள் எழுப்பினர்.குமரன் நகர் சுந்தரம் லே -- அவுட் மற்றும் நேதாஜி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், கோவை தெற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொள்ளாச்சி பல்லடம் ரோடு நகர தி.மு.க., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமை வகித்தார்.தெற்கு ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சியில், காங்., - தி.மு.க., கூட்டணியினர், கோவை தெற்கு மாவட்ட காங்., தலைவர் பகவதி தலைமையில், கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியினர் தங்கள் வீடுகள் முன் கறுப்பு கொடியுடன், மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். கிணத்துக்கடவில், மேற்கு ஒன்றிய செயலாளர் முகமதுயாசின் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வால்பாறைவால்பாறையில், தி.மு.க., சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

நிகழ்ச்சியில், நகர செயலாளர் பால்பாண்டி, தொழிற்சங்க தலைவர் கணேசன், பொதுச்செயலாளர் வினோத் மற்றும் மனித நேய மக்கள் கட்சி நகர தலைவர் சபீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.உடுமலைஉடுமலையில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

துங்காவியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வேலுசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கணக்கம்பாளையம் வெஞ்சமடை பகுதி நடந்த ஆர்ப்பாட்டத்தில், இ.கம்யூ.,மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தரராஜ், தாலுகா செயலாளர் ரணதேவ், காங்., நகரத்தலைவர் ரவி, ம.தி.மு.க., வைரவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
W W - TRZ,இந்தியா
21-செப்-202110:59:06 IST Report Abuse
W W பெட்ரோல், டீசல் எரிவாயு இவற்றை GST யின் கீழ் கொண்டு வரவேண்டும் அதை விட்டு விட்டு மக்களை ஏமாற நினைக்கும் ஆர்ப்பாட்டம் தீவையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X