ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு: 8 மாணவர்கள் உயிரிழப்பு

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மாஸ்கோ-ரஷ்ய பல்கலையில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் எட்டு மாணவர்கள் உயிரிழந்தனர். ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள மருததுவ பல்கலைக் கழக வளாகத்தின் முதல் தளத்தில் நேற்று அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்து சரமாரியாக சுட்டார். இதில் எட்டு மாணவர்கள் பலியாயினர். காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.மர்ம நபர்
ரஷ்யா, துப்பாக்கிச் சூடு, எட்டு மாணவர்கள், உயிரிழப்பு

மாஸ்கோ-ரஷ்ய பல்கலையில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் எட்டு மாணவர்கள் உயிரிழந்தனர். ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள மருததுவ பல்கலைக் கழக வளாகத்தின் முதல் தளத்தில் நேற்று அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்து சரமாரியாக சுட்டார். இதில் எட்டு மாணவர்கள் பலியாயினர். காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


latest tamil news


மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த 'வீடியோ'வில் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க, மாணவர்கள் பலரும் கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து வெளியே குதிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. துப்பாக்கியால் சுட்டவர் திமூர் பெக்மன்சுரோவ், 18, என அடையாளம் காணப்பட்டதாகவும், போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் அவர் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே பெர்ம் பல்கலையில் படிக்கும் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அங்குள்ள நம் துாதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-செப்-202114:20:26 IST Report Abuse
jayvee இவர் ஒரு தீவிரவாதியாக இருந்தாலும், புடின் அரசு அவரை மனநிலை பாதித்தவர் என்று கூறி மனநல காப்பகத்தில் அடைத்துவிடும். ஏனென்றால் ரஷ்யாவில் தீவிரவாதம் இல்லை என்பதை மறைக்க புடின் இந்த வேலையை செய்வார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X