7 'எம்மி' விருது: 'தி கிரவுன்' தொடர் அசத்தல்

Added : செப் 21, 2021
Share
Advertisement
லாஸ் ஏஞ்சலஸ்-'எம்மி' விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த தொடர், சிறந்த நடிகை, நடிகர் உட்பட ஏழு விருதுகளை, 'தி கிரவுன்' தொடர் தட்டிச் சென்றுள்ளது.அமெரிக்காவில் ஆண்டுதோறும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கு எம்மி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன.'நெட்பிளிக்ஸ்' இந்நிலையில் 73வது எம்மி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்

லாஸ் ஏஞ்சலஸ்-'எம்மி' விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த தொடர், சிறந்த நடிகை, நடிகர் உட்பட ஏழு விருதுகளை, 'தி கிரவுன்' தொடர் தட்டிச் சென்றுள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கு எம்மி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன.'நெட்பிளிக்ஸ்' இந்நிலையில் 73வது எம்மி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், சிறந்த டிராமா தொடருக்கான எம்மி விருது, 'நெட்பிளிக்ஸ்' ஒ.டி.டி., தளத்தில் ஒளிபரப்பாகும், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'தி கிரவுன்' தொடருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் ராணி இரண்டாம் எலிசபெத்தாக நடித்த ஆலிவியா கோல்மேனுக்கு, சிறந்த நடிகைக்கான விருதும், இளவரசர் சார்லசாக நடித்த ஜோஷ் ஓ கானருக்கு, சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.காமெடிசிறந்த துணை நடிகருக்கான விருது, இளவரசர் பிலிப்பாக நடித்த டோபியஸ் மென்சீசுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது, முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சராக நடித்த கில்லியான் ஆண்டர்சனுக்கும் வழங்கப்பட்டன.தி கிரவுன் தொடரின் இயக்குனர் ஜெசிகா ஹாப்ஸுக்கு, சிறந்த இயக்குனருக்கான விருதும், எழுத்தாளர் பீட்டர் மார்கனுக்கு, சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான விருதும் வழங்கப்பட்டன.

ஏழு விருதுகளை வென்று, எம்மி விருதுகள் வழங்கும் விழாவில், தி கிரவுன் தொடரின் குழு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.காமெடி தொடருக்கான எம்மி விருது, 'டெட் லாஸோ' தொடருக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகைக்கான விருதுகளையும் இந்த தொடர் வென்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X