பொது செய்தி

இந்தியா

இன வெறியை தூண்டும் பிரிட்டன்; காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி-'பிரிட்டனில் இந்தியர்களுக்கான புதிய பயண விதிகள், இன வெறியை துாண்டுவதை போல உள்ளன' என்று, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர் ஆகியோர் குற்றஞ் சாட்டிஉள்ளனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன், கொரோனா தொற்று பரவலின் நிலவரத்தை பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என, ஒவ்வொரு நாட்டையும் தரம் பிரித்தது. இதில், இந்தியா ஆரஞ்சு பட்டியலில் இருந்தது.'அடுத்த

புதுடில்லி-'பிரிட்டனில் இந்தியர்களுக்கான புதிய பயண விதிகள், இன வெறியை துாண்டுவதை போல உள்ளன' என்று, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர் ஆகியோர் குற்றஞ் சாட்டிஉள்ளனர்.



latest tamil news


ஐரோப்பிய நாடான பிரிட்டன், கொரோனா தொற்று பரவலின் நிலவரத்தை பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என, ஒவ்வொரு நாட்டையும் தரம் பிரித்தது. இதில், இந்தியா ஆரஞ்சு பட்டியலில் இருந்தது.'அடுத்த மாதம் 4ம் தேதி முதல் இந்த பட்டியல் முறை நீக்கப்பட்டு, அனைத்து நாடுகளும் சிவப்பு பட்டியலில் வைக்கப்படும்' என, பிரிட்டன் அறிவித்துள்ளது.

இந்நிலையில், 'இரண்டு டோஸ் 'கோவிஷீல்டு' தடுப்பூசி போட்ட இந்தியர்கள் பிரிட்டன் பயணிக்கும்போது, அவர்கள் தடுப்பூசி போடாதவர்களாக கருதப்படுவர். எனவே, அவர்கள் பிரிட்டன் புறப்படுவதற்கு முன், கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். 'பிரிட்டன் சென்று சேர்ந்த இரண்டாவது மற்றும் எட்டாவது நாட்களில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். 'அவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரியில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்' என, பல புதிய விதிகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது


latest tamil news


இதற்கு, காங்., மூத்த தலைவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களுமான ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.''பிரிட்டனின் இந்த அறிவிப்பு, இன வெறியை துாண்டுவதை போல உள்ளது. பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியை, 'சீரம் இந்தியா' நிறுவனம் தயாரித்து பிரிட்டனுக்கே வழங்கிஉள்ளது,'' என, ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.காங்., - எம்.பி., சசி தரூர் கூறுகையில், ''இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட இந்தியர்களை தனிமைப்படுத்திக் கொள்ள சொல்வது, அவர்களை அவமதிக்கும் செயல்,'' என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
21-செப்-202115:56:57 IST Report Abuse
jayvee இதையெ காங்கிரஸ் செய்தல் அது செகுலரிஸ்ம்.. இந்தியாவில்
Rate this:
Cancel
BALOU - st-denis,பிரான்ஸ்
21-செப்-202111:48:11 IST Report Abuse
BALOU அவர்கள் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை சொந்த நாட்டு மக்களையே அவர்கள் அப்படிதான் நடத்துகிறார்கள் உதாரணமாக இரண்டு முறை பைசர் ஊசி போட்டு கொண்டவர்கள் இரண்டு நாள் மருத்துவமனையில் தங்க வேண்டி இருந்தால் கண்டிப்பாக பிசிர் டெஸ்ட் எடுத்து கொண்டு சென்றால்தான் உள்ளே அனுமதிப்பார்கள் .இரண்டாவது எல்லா சர்டிவிகெட் களும் காசுக்கு கிடைக்கின்றன .
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
21-செப்-202109:16:28 IST Report Abuse
Paraman இவர்கள் இந்திய நாட்டின் சாபக்கேடுகள் ஆனால் இவர்களுக்கு தான் இந்திய அரசு பத்ம விருதுகள், பாரத் ரத்னம் வழங்கி கவுரவிக்கும் கருமம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X