பாஜக எம்.எல்.ஏ.க்களை ஈர்க்க காங்., ஆப்பரரேஷன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாஜக எம்.எல்.ஏ.க்களை ஈர்க்க காங்., ஆப்பரரேஷன்

Added : செப் 21, 2021
Share
பெங்களூரு : அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை ஈர்க்க காங்கிரஸ், 'ஆப்பரேஷன் கை' நடத்துவதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக, காங்., தலைவர் சிவகுமார், பா.ஜ., - எம்.எல்.ஏ., குமாரசாமியை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.இது குறித்து குமாரசாமி கூறியதாவது:நான் அடிப்படையில் பா.ஜ.,வை சேர்ந்தவன். காங்கிரசுக்கு செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. சிவகுமார்

பெங்களூரு : அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை ஈர்க்க காங்கிரஸ், 'ஆப்பரேஷன் கை' நடத்துவதாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக, காங்., தலைவர் சிவகுமார், பா.ஜ., - எம்.எல்.ஏ., குமாரசாமியை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.இது குறித்து குமாரசாமி கூறியதாவது:நான் அடிப்படையில் பா.ஜ.,வை சேர்ந்தவன். காங்கிரசுக்கு செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. சிவகுமார் என்னை சந்திக்கவில்லை.எனக்கு கட்சியில் எந்த அதிருப்தியும் இல்லை. அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக, கட்சி என்னை கவுரவமாக நடத்தவில்லை என்று அர்த்தமில்லை.கட்சி என்னை கவுரவமாகவே நடத்துகிறது. எம்.எல்.ஏ.,வாக நான் இந்த அளவுக்கு முன்னேற, பா.ஜ.,வே காரணம்.எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், பா.ஜ.,வில் தான் இருப்பேன்; முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக இருப்பேன்.என் தொகுதி மக்களின் அபிவிருத்திக்காக பணியாற்றுவேன். காங்கிரசுக்கு செல்ல மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X