கரு கலைப்புக்கு அனுமதி கோரும் சிறுமியர் எண்ணிக்கை அதிகரிப்பு -

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
கொச்சி-பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, கரு கலைப்பு செய்ய அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தை நாடும் சிறுமியர் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல், ஜன., வரையிலான காலத்தில் பல்வேறு சம்பவங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி கர்ப்பம் அடைந்த ஏழு

கொச்சி-பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, கரு கலைப்பு செய்ய அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தை நாடும் சிறுமியர் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது.latest tamil newsகேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல், ஜன., வரையிலான காலத்தில் பல்வேறு சம்பவங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி கர்ப்பம் அடைந்த ஏழு சிறுமியர், கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளிக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தை நாடினர்.பாதிக்கப்பட்ட சிறுமியர் குடும்பத்தினர் தாக்கல் செய்த இந்த மனுக்கள் மீது, மருத்துவ வாரியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், கர்ப்பத்தை கலைக்க உயர் நீதிமன்றம் அனைவருக்கும் அனுமதி அளித்தது.ஜூலையில் பாலியல் பலாத்காரத்தினால் கர்ப்பம் அடைந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கரு கலைப்பு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.இந்த மாதத்தில் மட்டும் இது போலவே மூன்று சிறுமியர் தாக்கல் செய்த மனுக்கள் கேரள உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தன. அதில் இரண்டு சிறுமிகள் கர்ப்பம் அடைந்து 20 வாரங்கள் கடந்து இருந்தன.

'இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் அது சிறுமியர் உடல் மற்றும் மன நலத்திற்கு ஆபத்தாக முடியும்' என, மருத்துவ வாரியம் எச்சரித்தது. இதையடுத்து இரண்டு சிறுமியருக்கு கரு கலைப்பு செய்ய, உயர் நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது.'கரு கலைப்பின் போது வயிற்றில் உள்ள சிசு உயிர் பிழைக்க வாய்ப்பிருப்பதால் மருத்துவமனை தரப்பு கவனமுடன் செயல்பட்டு குழந்தை பிழைத்தால் அதன் உயிரை பாதுகாக்க உறுதி அளிக்க வேண்டும்' என, மருத்துவ வாரியம் பரிந்துரைத்து. மூன்றாவது மனு நேற்று விசாரணைக்கு வந்தது.


latest tamil news


இதில், பாதிக்கப்பட்ட சிறுமி எட்டு வாரங்கள் கர்ப்பமாக உள்ளார்.கரு கலைப்பு செய்தால், அது பாலியல் பலாத்கார வழக்கின் சாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என அஞ்சி, மருத்துவமனை வட்டாரம் மறுப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
21-செப்-202114:15:41 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN மூர்க்கம் அங்கே வேகமா வளருது அதுவும் ஒரு காரணம்
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
21-செப்-202109:57:08 IST Report Abuse
JeevaKiran பாதிக்கப்பட்ட சிறுமி எட்டு வாரங்கள் கர்ப்பமாக உள்ளார்.கரு கலைப்பு செய்தால், அது பாலியல் பலாத்கார வழக்கின் சாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என அஞ்சி, மருத்துவமனை வட்டாரம் மறுப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. சாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என அஞ்சி,-விசித்திரமாக உள்ளது. இன்னுமா வழக்கு முடியவில்லை. அதான் குற்றவாளிகளும் சர்வசாதாரணமாக குற்றம் புரிகிறார்கள். நீதிமன்றங்களும் எல்லா வழக்குகளையும் குதிரைக்கு கண்ணை கட்டிவிட்டதுபோல் ஒரே பார்வையில் பார்க்க கூடாது.
Rate this:
Cancel
21-செப்-202109:33:52 IST Report Abuse
ராஜா கம்மிகள் ஆட்சியில் கலாச்சாரத்துக்கு இடம் ஏது? சுய நலமும், சுய கட்டுப்பாட்டை இழப்பதும் தான் நாகரீகம். திமுக ஆட்சியில் தமிழ்நாடும் விரைவில் இதுபோல் ஆகிவிடும்.
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
21-செப்-202111:51:01 IST Report Abuse
Rajஇது இந்தியா முழுதும் நடக்கிறது. அதனால் தான் ராஜஸ்தானில் சிறுவர் திருமணத்தை ஆதரிக்கிறார்கள்...
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
21-செப்-202113:45:45 IST Report Abuse
தஞ்சை மன்னர் கூ .முட்டை ராஜா எந்த ஆட்சி நடந்தாலும் பாலியல் குற்றங்கள் நடந்த கொண்டுதான் இருக்கு , உபியில் சாமியாரின் ஆட்சியில் தினசரி 32 வழக்குகள் நடந்து வருகிறது அங்கு போய் இது போல சொல்லி திருத்தவும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X