பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை கல்லுாரிக்கு விடுமுறை 3 மாணவர்களுக்கு கொரோனா

Added : செப் 21, 2021
Share
Advertisement
ரெட்டியார்சத்திரம்--திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் தோட்டக்கலை மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கல்லுாரிக்கு விடுமுறை விடப்பட்டது.அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் ரெட்டியார்சத்திரத்தில் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு 135 மாணவர்கள் டிப்ளமோ படிக்கின்றனர். செப்.,1 முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கின. நேற்று முன்தினம் விடுதி

ரெட்டியார்சத்திரம்--திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் தோட்டக்கலை மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கல்லுாரிக்கு விடுமுறை விடப்பட்டது.

அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் ரெட்டியார்சத்திரத்தில் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு 135 மாணவர்கள் டிப்ளமோ படிக்கின்றனர். செப்.,1 முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கின. நேற்று முன்தினம் விடுதி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதியானது.திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கல்லுாரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பிற மாணவர்கள், அலுவலர்களிடம் கொரோனா சோதனைக்கு மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது.

நேற்று கே.புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், கொத்தப்புள்ளி ஊராட்சி நிர்வாகம் சார்பில், கல்லுாரி வளாகம், மாணவர் விடுதியில் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டன. அலுவலர் ஒருவர் கூறுகையில் 'உயரதிகாரிகள் ஆலோசனைப்படி, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடக்க வாய்ப்புள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X