சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உத்தமபாளையம் டி.இ.ஓ., அலுவலகத்தில் லஞ்சம்

Added : செப் 21, 2021
Share
Advertisement
உத்தமபாளையம்--உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவியாளர் அருண்குமார் ரூ.5 000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கினார்.உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இங்கு கூடலுாரைச் சேர்ந்த அருண்குமார் 36, உதவியாளராக பணியாற்றி வருகிறார். கம்பம் தாத்தப்பன் குளத்தில் உள்ள நகராட்சி பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக

உத்தமபாளையம்--உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவியாளர் அருண்குமார் ரூ.5 000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கினார்.

உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இங்கு கூடலுாரைச் சேர்ந்த அருண்குமார் 36, உதவியாளராக பணியாற்றி வருகிறார். கம்பம் தாத்தப்பன் குளத்தில் உள்ள நகராட்சி பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் கிஷோர், எட்டு மாதங்களுக்கு முன்பு, மாவட்ட கல்வி அலுவலகத்தில் தேர்வு நிலை பதவி உயர்வுக்காக விண்ணப்பித்தார். அவருடைய விண்ணப்பத்தை மேல் அதிகாரிகளிடம் கையெழுத்துப் பெறுவதற்காக ரூ.5000 லஞ்சமாக அருண்குமார் கேட்டார்.

கிஷோர் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.நேற்று மாலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்த அருண்குமாரிடம் கிக்ஷோர் ரூ. 5000 கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கருப்பையா தலைமையிலான போலீசார் அருண்குமாரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது. கூடலுாரில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X