சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தையை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய மகன்: குடும்பத்தையே கெடுத்தது குடி

Added : செப் 21, 2021
Share
Advertisement
அம்பாத்துறை,-- -திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை அருகே குடிபோதை தந்தை ஜெரால்டு தங்கராஜின் 41 தொல்லை பொறுக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசிய வளர்ப்பு மகன் ஜெய்கிஷோரை 21 போலீசார் கைது செய்தனர்.செட்டியபட்டி அருகே இரு தினங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் ஒரு ஆண் உடல் கிடந்தது. தற்கொலை என கருதிய போலீசார் விசாரணையை

அம்பாத்துறை,-- -திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை அருகே குடிபோதை தந்தை ஜெரால்டு தங்கராஜின் 41 தொல்லை பொறுக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசிய வளர்ப்பு மகன் ஜெய்கிஷோரை 21 போலீசார் கைது செய்தனர்.

செட்டியபட்டி அருகே இரு தினங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் ஒரு ஆண் உடல் கிடந்தது. தற்கொலை என கருதிய போலீசார் விசாரணையை துவக்கினர்.மனைவியுடன் தகராறுபோலீசார் கூறியது: திண்டுக்கல் ஏ.வெள்ளோடு ஜெரால்டு தங்கராஜ் 41 பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மனைவியை பிரிந்தார். பின் ஐந்து வயது மகனுடன் இருந்த ரீடாமேரியை திருமணம் செய்தார். ரீடாமேரிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.தங்கராஜ் தினமும் குடித்து விட்டு மனைவியை அடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். வேலைக்கும் செல்லாமல் மனைவியை வேலைக்கு அனுப்பி கிடைக்கும் பணத்தையும் செலவு செய்துள்ளார். அவரது கொடுமை தாங்காமல் ரீடாமேரி 2018 ல் தற்கொலை செய்து கொண்டார்.

வளர்ப்பு மகனான ஜெய்கிஷோரை 21 வேலைக்கு அனுப்பி அதில் வரும் பணத்தையும் குடித்தே செலவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஜெய்கிஷோர் கிருஷ்ணன் பணம்தர மறுத்தார்.'பணம் தர மறுத்தால் சொத்தை மகள் பெயருக்கு எழுதி வைத்து விடுவேன்' என ஜெரால்ட் தங்கராஜ் மிரட்டினார்.ஆத்திரமடைந்த ஜெய்கிஷோர் தன்னுடன் பணிபுரியும் பிராங்க்ளின் என்ற அபிஷ் 18 நண்பன் ஆறுமுகப்பாண்டியன் 21 ஆகியோருடன் சேர்ந்து போதையில் இருந்த தந்தையை பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.

கொலையை விபத்து போல காட்டுவதற்காக ஜெரால்ட் தங்கராஜ் உடலை தண்டவாளத்தில் வைத்து விட்டு சென்றனர்.போலீசார் விசாரணைதண்டவாளத்தில் தலைதுண்டாகி உடல் கிடந்ததால் போலீசார் முதலில் தற்கொலையாக இருக்கலாம் என கருதினர். அருகிலேயே ரத்தக்கறை படிந்த மரக்கட்டை சிதறிய பாட்டில்கள் உட்பட தடயங்களை கண்டறிந்தனர்.

இதை வைத்து தங்கராஜூக்கு நெருக்கமானவர்கள் எதிரிகள் உறவினர்கள் என பலரிடமும் விசாரணை நடந்தது.ஜெய்கிஷோரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இறுதியில் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X