அரசு வேலை மோசடி பள்ளி ஆசிரியர் மீது புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு வேலை மோசடி பள்ளி ஆசிரியர் மீது புகார்

Added : செப் 21, 2021
Share
ஈரோடு,-அரசு வேலை வாங்கி தருவதாக, அரசு பள்ளி ஆசிரியர் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துஉள்ளது.ஈரோடு மாவட்டம், பொறவாகாட்டைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர்,ஈரோடு எஸ்.பி., சசிமோகனிடம் நேற்று அளித்தமனுவில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டம் கொளத்துப்பாளையத்தில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் ராஜசேகர், பல நபர்களுக்கு அரசு வேலை வாங்கித் தந்துள்ளேன் என்று

ஈரோடு,-அரசு வேலை வாங்கி தருவதாக, அரசு பள்ளி ஆசிரியர் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துஉள்ளது.

ஈரோடு மாவட்டம், பொறவாகாட்டைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர்,ஈரோடு எஸ்.பி., சசிமோகனிடம் நேற்று அளித்தமனுவில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டம் கொளத்துப்பாளையத்தில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் ராஜசேகர், பல நபர்களுக்கு அரசு வேலை வாங்கித் தந்துள்ளேன் என்று கூறினார்.இதனால், என் மனைவிக்கு சத்துணவு ஆயா வேலை வாங்கித் தர, 2020 பிப்., மாதம் ௩.௫௦ லட்சம் ரூபாய் கொடுத்தேன். சில நாட்களில் நியமன ஆணையை கொடுத்தார். அது போலி என தெரிந்தது.இதனால் பணத்தை திரும்ப கேட்டேன்; மிரட்டி வருகிறார். நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதேபோல் அரசு வேலை வாங்கித் தருவதாக, ராஜசேகர் பணம்பெற்று மோசடி செய்ததாக,20 பேர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X